எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டும் இல்லைனா விஜய் அதைத்தான் செஞ்சிருப்பாரு.. தலைவரே இல்ல.. விளாசிய பிரபலம்

சென்னை: கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். கமர்ஷியல் கிங்காக வலம் வரும் விஜய், தனது படங்கள் மூலம் சராசரியாக 300 கோடி ரூபாயை வசூலிப்பவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம்கூட 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இப்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவர் குறித்து தடா ரஹீம் காட்டமாக பேசியிருக்கிறார்.

தளபதி என்று அழைக்கப்படும்விஜய் இப்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்தாலும் அவரை இந்த அளவுக்கு உயர்த்திவிட்டது என்னவோ அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர்தான். விஜய்யின் கரியரில் மெகா ஹிட்டான படங்களில் எல்லாம் விஜய் நடிக்க காரணமாக இருந்தவர் சந்திரசேகர். உதாரணமாக துப்பாக்கி உள்ளிட்ட படங்களை சொல்லலாம். அதேபோல் ஆரம்பகாலத்தில் விஜய்க்காக பல இயக்குநர்களிடம் எஸ்.ஏ.சி நேரடியாக சென்று வாய்ப்பு கேட்டதும் கவனிக்கத்தக்கது.

Vijay SA Chandrasekhar GOAT

குடும்ப பிரச்னை: இப்படி விஜய்க்கு எல்லாமுமாக இருந்த எஸ்.ஏ.சந்திரசேர் இப்போது அவரை விட்டு விலகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு வருவதெல்லாம் சும்மா ஃபார்மலிட்டுக்குதான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். இருவருக்கும் முட்டிக்கொண்டதற்கு பல காரணங்கள் யூகங்களாக கூறப்பட்டன. ஆனால் இருதரப்பும் அமைதியாக இருந்தது. இந்தச் சூழலில் சமீபத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரையும், ஷோபாவையும் விஜய் சந்தித்த புகைப்படம் வெளியானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் விஜய் குடும்பத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்பது இந்தப் புகைப்படத்தால் உறுதியாகிவிட்டதாக கூறினர்.

தமிழக வெற்றிக் கழகம்: விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். GOAT படத்தில் நடித்துவரும் அவர்; அடுத்ததாக ஒரு படத்தில் மட்டும் நடித்துவிட்டு முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். விஜய்யின் கடைசி படத்தை ஹெச்.வினோத் இயக்குவார் என்றும் அதில் சமந்த ஹீரோயினாக நடிக்கிறார் என்றும் கடந்த சில நாட்களாகவே தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

தடா ரஹிம் பேட்டி: இந்நிலையில் விஜய் குறித்தும் அவரது அரசியல் பிரவேசம் குறித்தும் பேசியிருக்கும் இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா ரஹீம், “விஜய்யைவிடவும் அஜித் ரசிகர்கள்தான் பல மடங்கு இருக்கிறார்கள். சோஷியல் மீடியாவில் அவர்களது பலம் என்ன என்பது தெரியும். விஜய்க்கு 100 பேர் இருக்கிறார்கள் என்றால் அஜித்துக்கு 1000 பேர் ரசிகர்களாக இருப்பார்கள். விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களிலேயே சண்டைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

இவரா மகுடம் சூட்டுவார்: அஜித்தின் ரசிகர்களையே விஜய்யால் ஒன்றும் பண்ண முடியவில்லை. இவர் தமிழ்நாட்டில் அரசியலில் இறங்கி மகுடமா சூட்டப்போகிறார். அது மட்டுமில்லாமல் சமீபத்தில் நடந்த கல்வி விருது விழாவிலும் அவர் என்ன பேசினார். நீட் தேர்வு பற்றி வாயே திறக்கவில்லை. அவர் அதை பற்றியல்லவா பேசியிருக்க வேண்டும். ஏன் அவர் நீட் தேர்வு பற்றி பேசவே இல்லை.

அரசியலுக்கு வர காரணம்: ஷாருக்கான், சல்மான் கானுக்கு 70 வயது ஆனாலும் சினிமாவில் ஜொலிக்க முடியும். ஆனால் விஜய்யை பொறுத்தவரைக்கும் பட்டி, டிங்கரிங் செய்து ஓரளவுக்கு சினிமாவில் தாக்குப்பிடிக்கிறார். ஒருகட்டத்துக்கு மேல் அதுவும் அவரால் பண்ண முடியாது. அதனால்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். இவ்வளவு பேசும் விஜய் தமிழ்நாட்டில் தலைவரே இல்லை என்று சொல்லியிருக்கிறார். அவர் வந்து என்ன செய்யப்போகிறார். சினிமாவில் அவருக்கு வரும் 200 கோடி ரூபாய் பெட்டியை மட்டும் வாங்கிக்கொண்டு வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வார்.

எஸ்.ஏ.சி மட்டும் இல்லையென்றால்?: முக்கியமாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் விஜய் ஒரு டெக்னீசியனாக கேமராவையோ, லைட்டையோ பிடித்துக்கொண்டிருந்திருப்பார். அதுவும் இல்லை என்றால் வேறு எதாவது ஒரு தொழிலுக்குத்தான் சென்றிருப்பார்” என்று காட்டமாக பேசியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X