அருண் விஜய்யின் சூப்பர் ஹிட் படம் இந்தியில் ரீமேக்காகிறது… என்ன படம் தெரியுமா?

சென்னை : நடிகர் அருண் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் இந்தியில் ரீமேக்காகிறது.

தமிழ்,இந்தி, மலையாளம்,தெலுங்கு என எந்த மொழி திரைப்படமாக இந்தாலும் அதுவெற்றி பெற்றுவிட்டால் அந்த படங்கள் ரீமேக் செய்வது திரைத்துறையின் ஒரு யுக்தியாக உள்ளது

குறிப்பாக தமிழில் வெற்றிப்பெற்ற படங்கள் இந்தியில் அதிக அளவில் ரீ மேக் செய்யப்படுகின்றன.

அருண் விஜய்

அருண் விஜய்

அருண் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தடம். க்ரைம் த்ரில்லர் திரைப்படமான இந்த படத்தை மகிழ்திருமேனி எழுதி இயக்கியுள்ளார். இந்தர் குமார் தயாரித்த இதில் அருண் விஜய் இரட்டை வேடத்திலும், தன்யா ஹோப், ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் வித்யா பிரதீப் என மூவர் நாயகிகளாக நடித்திருந்தனர்.

வெற்றி பெற்றது

வெற்றி பெற்றது

அருண் ராஜா இசையமைத்துள்ள இதற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்திருந்தார். இந்த படத்தின் மூலம் தான்யா மற்றும் ஸ்ம்ருதி ஆகிய இருவரும் அறிமுகமாகி இருந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்த படம் வெகுவாக பாராட்டுகளைப் பெற்றது. வணிக ரீதியாகவும் வெற்றி அடைந்தது தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படத்தில் ஒன்றாக இருந்தது.

இரட்டை கதாபாத்திரத்தில்

இரட்டை கதாபாத்திரத்தில்

தடம் திரைப்படத்தில் அருண் விஜய், எழில், கவின் என்கிற இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருப்பார். இன்ஜினியரான எழில் கதாபாத்திரத்திலும், திருடனாக கவின் கதாபாத்திரத்திலும் காட்சிக்கு காட்டி வெரைட்டி காட்டி நடித்திருப்பார் அருண் விஜய். இப்படம் தெலுங்கில் போதினேனியை வைத்து ரெட் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

ஹிந்தியில்

ஹிந்தியில்

இந்நிலையில் தடம் ஹிந்தியில் ரீமேக்காகும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இப்படம் பாலிவுட் நடிகர் ஆதித்யா ராய் கபூர் கதாநாயகனாக நடிக்கிறார். இயக்குனர் வர்தன் கேட்கர் என்பவர் இப்படத்தை இயக்க உள்ளார். படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X