Don't Miss!
- Automobiles
தோனி கவாஸாகி பைக், கோலி பிஎம்டபிள்யூ கார்-னு சொன்னாங்களே... எல்லாம் பொய்யா!! குடும்பத்தினர் வெளியிட்ட உண்மை
- News
"கூவாத சேவல்".. கிலியில் எடப்பாடி.. "அவரா" வேட்பாளர்.. 2 சிக்கலும் 3 சாய்ஸூம்.. ஓவர் கன்ஃபியூஷன் போல
- Technology
பதான் திரைப்படத்தில் புதிய ஸ்மார்ட்போனுடன் வரும் ஹர்திக் பாண்டியா! ட்விட்டரில் வெளியான புகைப்படம்!
- Lifestyle
நீங்க 5,14 மற்றும் 23 ஆம் தேதிகளில் பிறந்தவர்களா? அப்ப உங்களைப் பற்றிய இந்த விஷயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க!
- Finance
அடடே.. இன்று தங்கம் விலை எவ்வளவு குறைஞ்சிருக்கு தெரியுமா.. சர்ப்ரைஸ் தான்!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
9 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் தடையறத் தாக்க படக்குழு... குவியும் பாராட்டுக்கள்
சென்னை : மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த 2012ல் வெளியான படம் தடையறத் தாக்க.
நடிகர் அருண் விஜய்யின் சிறப்பான ஆக்டிங்கில் வெளிவந்த இந்த படம் அவரது கேரியரில் சிறப்பான படமாக அமைந்தது.
யுவனை
கலாய்த்த
இளையராஜா...வைரலாகும்
வீடியோ!
மம்தா ஹீரோயினாக நடித்திருந்த இந்த படத்தின் 9வது ஆண்டு நிறைவை தற்போது படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

அருண் விஜய் சிறப்பான ஆக்டிங்
இயக்குநர் மகழ்திருமேனி இயக்கத்தில் கடந்த 2012ல் வெளியான படம் தடையறத் தாக்க. தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள போராடும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை கண்முன்னே நிறுத்திய இந்த படத்தில் அந்த இளைஞனாகவே வாழ்ந்து காட்டினார் நடிகர் அருண் விஜய்.

மிரட்டிய வில்லன்கள்
அவரது கேரியரில் பாண்டவர் பூமி படத்திற்கு பிறகு சிறப்பான படமாக அமைந்தது தடையறத் தாக்க. அவருக்கு படத்தில் ஜோடியாகியிருந்தார் மம்தா. தன்னுடைய சிறப்பான நடிப்பால் அவரும் கவனம் பெற்றிருந்தார். வம்சி மற்றும் அருள்தாஸ் போன்ற வில்லன்கள் படத்தில் மிரட்டியிருந்தனர்.
Recommended Video

பரிதாபத்தை ஏற்படுத்திய பிளாஷ்பேக்
படத்தில் இன்னொரு ஹீரோயினாக வந்த ரகுல் பிரீத்சிங்கும் தன்னுடைய கேரக்டருக்கு பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அவரது பிளாஷ்பேக் மற்றும் அவரது முடிவு ரசிகர்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தியிருந்தன. மேலும் படத்தில் காமெடி காட்சிகளுக்கும் குறைவில்லாமல் இருந்தது.

கொண்டாடும் படக்குழு
இந்நிலையில் படத்தின் 9வது ஆண்டு நிறைவை தற்போது படக்குழுவினர் கொண்டாடி வருகினற்னர். இதையொட்டி ட்விட்டர் பக்கத்தில் படத்திற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 9 ஆண்டுகள் ஆனதாக தெரியவில்லை என்றும் இப்போதுதான் பார்த்ததாக தோன்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.