10 வயசு சிறுமிக்கு இப்படி ஒரு கொடுமையா? இனி இது நடக்கக்கூடாது..முதல்வருக்கு தாடி பாலாஜி கோரிக்கை!

சென்னை: கோவை சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 10 வயது சிறுமி, கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென காணாமல் போனார். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததால், சூலூர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் குளக்கரையோர முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

சிறுமிக்கு அந்த கொடூரம்: சிறுமி மாயமான பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் சிறுமியைத் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமான கார்த்தி, மோகன் ராஜ் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவத்தை பலர் கண்டித்து வருகின்றனர்.

Coimbatore Thadi Balaji video
Photo Credit:

தாடி பாலாஜி கோரிக்கை: இதுகுறித்து வீடியோ வெளியிட்டு இருக்கும் தாடி பாலாஜி, அந்த வீடியோவில் தாடி பாலாஜியாக, ஒரு தகப்பனாக விஜய் அவர்களுக்கு இந்த கோரிக்கையை வைக்கிறேன். கோயம்புத்தூர் சூலூரில் பத்து வயது சிறுமிக்கு மிகப்பெரிய கொடுமை நடந்து இருக்கிறது. அதை நினைக்கும் போது எனக்கு உண்மையிலேயே வேதனையாக இருக்கிறது. எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் அங்கு நேரில் செல்லவில்லை, இல்லையென்றால் நிச்சயமாக சென்று இருப்பேன்.

சரியான தண்டனை தேவை: இதன் மூலம் தமிழக முதல்வர் அவர்களுக்கு நான் ஒரு பெரிய வேண்டுகோளை வைக்கிறேன். இதற்கான நடவடிக்கையை நீங்கள் உடனடியாக எடுக்க வேண்டும். ஏனென்றால் நீங்கள் நிறைய மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறீர்கள், அதையும் தாண்டி இதுபோன்ற விஷயங்களுக்கு சரியான தண்டனை கொடுத்தீர்கள் என்றால் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும் என்றார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு மற்றும் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். தாடி பாலாஜியின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X