Vijay: என்ன ஆனாலும் சரி.. கலங்காதே நண்பா.. கண்டுக்காத விஜய்க்கு தாடி பாலாஜி சப்போர்ட்
சென்னை: நடிகர் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும், அதனால் தனக்கும் விஜய்க்குமான திருமண பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடி உள்ளார். இந்த விவகாரம் குறித்த பேச்சுக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகரும் நடிகர் விஜய்யின் பால்யகால நண்பருமான தாடி பாலாஜி விஜய் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்து, விஜய்க்கு ஆறுதல் அளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.
விஜய்யின் மனைவி சங்கீதாவை பொறுத்தவரையில், தனது விவாகரத்து கோரிய மனுவில் மிகத் தெளிவாக சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். அதாவது, எனது கணவர் விஜய், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். நான் அதை கண்டுபிடித்த பின்னர் அந்த திருமணத்தை மீறிய உறவை துண்டிப்பதாக கூறினார். ஆனால் அவர் அதைச் செய்யாமல் நடிகையுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது, பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது உள்ளிட்டவற்றை செய்து வருகிறார்.

இது மட்டும் இல்லாமல், நடிகையுடனான புகைப்படங்களை பகிர்வது எனது குழந்தைகளுக்கும் எனக்கும் மிகவும் தர்ம சங்கடமான சூழலை உருவாக்குகிறது. நான் கண்டிக்கத் தொடங்கிய பின்னர், எனக்கான உரிமைகள் எனது புகுந்த வீட்டில் கிடைக்காதவாறு செய்தார். அதனாலும் நான் மன உளைச்சலுக்கு ஆளானேன். என்னை விஜய் அல்லது அவரது தரப்பில் மிரட்டினாலோ, அழுத்தம் கொடுத்தாலோ நடிகையின் பெயரை வெளியிடுவேன். தேவைப்பட்டால் ஆதாரங்களை வெளியிடுவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தாடி பாலாஜி: இவரது விவாகரத்து கோரிய விண்ணப்பம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைக் கிளப்பி உள்ளது. பலரும் விஜய்க்கு எதிராகவும், சிலர் விஜய்க்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் நடிகர் தாடி பாலாஜி தெரிவித்துள்ள கருத்துக்கள் தான். தாடி பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் உடனான புகைப்படத்தை பகிர்ந்து, " எதுவும் மாறட்டும்... உண்மை மட்டும் மாறாது, எத்தனை புயல் வந்தாலும் நீதி தளராது. இன்று சோதனை என்றாலும் நாளை வெற்றி நிச்சயம், கலங்காதே நண்பா... உன் நியாயம் நிச்சயம் ஜெயிக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

கவனம்: இவரது பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கியதும் தன்னை இணைத்துக் கொண்டு, ஆர்வமாக பணியாற்றிய தாடி பாலாஜி, அதன் பின்னர் ஏற்பட்ட மன வருத்தங்களால் அந்த கட்சியில் இருந்து வெளியேறி, லட்சிய ஜனநாயக கட்சியில் இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











