மலைவாழ் மக்களின் வாழ்வியலை சொல்லும் தேன் படம்... நாளை சோனி லைவ் தமிழில் ரிலீஸ்
சென்னை : மலைவாழ் மக்களின் வாழ்வியலை காட்சிப்படுத்திய தேன் படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்றது.
40க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் இந்த படம் திரையிடப்பட்டது.
இந்நிலையில் இந்த படம் நாளை சோனி லைவ் தமிழில் ரிலீசாக உள்ளது.

விமர்சனரீதியாக நல்ல பெயர்
இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண்குமார் அபர்ணதி நடிப்பில் உருவான தேன் படம் விமர்சன ரீதியாக நல்ல பெயரை பெற்ற படம். இந்த படம் 40க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது.

நாயகன் வாழ்க்கை மாற்றங்கள்
மேலும் கடந்த ஆண்டிற்கான இந்திய பனோரமாவால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு தமிழ் படங்களில் தேன் படமும் ஒன்று. மேலும் 11வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா உள்ளிட்டவற்றில் விருதுகளையும் பெற்றுள்ளது. மலை கிராமத்தில் தேன் சேகரித்து பிழைப்பை நடத்தும் நாயகனின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை இந்த படம் மையமாக கொண்டுள்ளது.

ஜெயில் பட நாயகி
வேலு என்ற கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார் தருண் குமார். இதேபோல அபர்ணதியும் தனது சிறப்பான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இவர் தற்போது ஜிவி பிரகாஷ்குமாருடன் ஜெயில் படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சோனி லைவ் தமிழில் ரிலீஸ்
இந்நிலையில் தேன் படம் தற்போது சோனி லைவ் தமிழில் நாளை ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் வாழ்க்கையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீடு ஏற்படுத்தும் பாதிப்பை கூறும் இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











