ஓரினச்சேர்க்கை.. மேடையிலேயே ஆண் நடிகருக்கு புரபோஸ் செய்து லிப் லாக் வேறு.. தீயாய் பரவும் போட்டோ!

தாய்லாந்து: உலகம் முழுவதும் ஓரினச்சேர்க்கை பிரபலங்கள் சினிமாத் துறையிலும் மற்ற துறையிலும் அதிகளவில் அதிகரித்து வருகின்றனர். தாய்லாந்தை சேர்ந்த 33 வயது நடிகர் மியூ தனது சக நடிகர் துல் பகோர்ன் என்பவரை காதலித்து வரும் நிலையில், வியாழனன்று நடைபெற்ற சினிமா விழாவிலேயே புரபோஸ் செய்து அந்த நடிகரை சர்ப்ரைஸ் செய்து விட்டார்.

தமிழ் சினிமாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றிய பார்வையை இயக்குநர் பா. ரஞ்சித் அழகாக எடுத்து வைத்திருந்தார். அதற்கு முன்பாக தவறாகவே அந்த விஷயம் சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கான விழாக்கள், அவர்களுக்கான அங்கீகாரங்கள் உள்ளிட்டவை சமூகத்தால் தற்போது அதிகளவில் கொடுக்கப்பட்டு வருகின்றன.

lgbt mew suppasit engagement

தாய்லாந்து நடிகர்கள் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், பொதுவெளியில் பிரஸ்மீட்டின் போது இப்படி ஆண் நடிகருக்கு மற்றொரு ஆண் நடிகர் புரபோஸ் செய்து சர்ப்ரைஸ் செய்திருப்பது எல்லாம் பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஒருவனுக்கு ஒருத்தி: ஒருவனுக்கு ஒருத்தி என்கிற கான்செப்ட் கடைபிடித்து வந்த நிலையில், விதி விலக்கில்லாத விதியும் இல்லை என்பது போல புதிய விதிகளை எழுதும் நபர்களாக ஒருவனுக்கு ஒருவன் என்றும் ஒருத்திக்கு ஒருத்தி என்கிற கான்செப்ட்டையும் இந்த ஓரினச்சேர்க்கையாளர்கள் எழுதியுள்ளனர். ஓரினச்சேர்க்கையாளர்களை ஊக்குவிக்கும் படங்களும், ஓடிடி வெப்சிரீஸ்களும் அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்கள் இனிமேலும் ஒளிந்து வாழாமல் தைரியமாக அறிவித்து நிச்சயம் செய்துக் கொண்டு திருமணம் செய்து வாழலாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்.

lgbt mew suppasit engagement

மனசுக்குப் பிடிச்சா போதும்: உடலுறவில் ஈடுபட்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு வளர்த்து ஆளாக்குவது தான் வாழ்க்கை என்று இல்லாமல் மனசுக்கு பிடித்த நபருடன் கடைசி வரை வாழ்ந்து விட்டு போவோம் என்கிற ஐடியாலஜியுடன் ஓரினச்சேர்க்கையாளர்கள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகின்றனர்.

lgbt mew suppasit engagement

புரபோஸ் செய்து லிப் லாக்: தாய்லாந்து நடிகரான மியூ (Mew Suppasit) என அழைக்கப்படும் 33 வயதாகும் சுபாஸிட் ஜாங்சேசிவட் தனது காதலரான மற்றொரு தாய்லாந்து நடிகரான துல் பகோர்ன் (Tul Pakorn) என்பவருக்கு சர்ப்ரைஸாக தங்களது 'ஆப்சென்ஸ்' பாடல் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பின் போது முட்டிப் போட்டு புரபோஸ் செய்து மோதிரத்தை எடுத்துக் காட்டி போட்டு விட்டு லிப்லாக் முத்தமும் கொடுத்துள்ளார். இருவரையும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X