twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தாய்லாந்து குகையில் மீட்பு பணி நடந்தபோதே கேமராவுடன் வந்த ஹாலிவுட் படக்குழு

    பணம் படுத்தும் பாடு: தாய்லாந்து குகையில் மீட்பு பணி நடந்தபோதே கேமராவுடன் வந்த ஹாலிவுட் படக்குழு

    By Siva
    |

    Recommended Video

    தாய்லாந்து குகையில் மீட்பு பணியின் போது வந்த ஹாலிவுட் படக்குழு- வீடியோ

    பாங்காக்: தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருந்தபோதே ஹாலிவுட் பட தயாரிப்பாளர்கள் இருவர் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டனர்.

    தாய்லாந்தின் சியாங் ரை மாகாணத்தில் உள்ள குகையில் 12 பள்ளி மாணவர்களும், அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் சிக்கிக் கொண்டனர். குகையில் சிக்கிய அவர்கள் 17 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    Thai cave rescue: Hollywood team is aleady on the spot

    மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் திறம்பட செயல்பட்டு அவர்களை மூன்றே நாட்களில் மீட்டனர். ஆனால் மீட்பு பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே ஹாலிவுட் படக்குழு ஒன்று கேமராவும், கையுமாக அங்கு வந்துவிட்டது.

    மீதமுள்ள சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது ஹாலிவுட் படக்குழு அப்பகுதியை அடைந்துவிட்டது. சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளர் பற்றி படம் எடுக்கும் வேலை ஏற்கனவே துவங்கிவிட்டது.

    தயாரிப்பாளர்களான மைக்கேல் ஸ்காட், ஆடம் ஸ்மித் ஆகியோர் குகையை சுற்றியுள்ள பகுதியில் இருப்போரிடம் பேட்டி எடுத்துள்ளனர். பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

    சிறுவர்கள் மீட்கப்படும் முன்பே படம் எடுக்க வந்துவிட்டீர்களே, உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா என்று கேட்டதற்கு, நாங்கள் இல்லை என்றால் வேறு ஏதாவது தயாரிப்பாளர் இங்கு வரத் தான் செய்வார். அதனால் நாங்கள் முந்திக் கொண்டோம் என்கிறார் ஸ்மித்.

    சிறுவர்களின் கதையை படமாக எடுத்தால் நிச்சயம் பெரிய வெற்றி பெறும் என்று ஸ்மித் மற்றும் ஸ்காட் நம்புகிறார்கள்.

    English summary
    While the divers were busy rescuing soccer team boys and their coach from a cave in Thailand, a team from Hollywood reached the spot and started its work.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X