Thaai Kizhavi deleted scene: தாய் கிழவி டெலிட்டேட் சீன்.. அட விஜய் சேதுபதியை இப்படி கலாய்ச்சுட்டாங்களே!

சென்னை: அறிமுக இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவான படம் தாய் கிழவி. கலையரசி ராதிகா மையக் கதாபாத்திரமாக நடிக்க உருவான இந்த படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. படம் வெளியாகி வசூல் ரீதியாக பிரமாண்ட வெற்றியைப் பெற்ற நிலையில் அண்மையில் படக்குழு வெற்றி விழா நடத்தியது. இப்படி இருக்கையில் படம் இதுவரை சுமார் ரூபாய் 70 கோடிகளுக்கும் மேல் வசூலித்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை படக்குழு யூடியூப் தளத்தில் வெளியிட்டுள்ளது.

தாய் கிழவி படத்தின் போஸ்டர் வெளியான காலத்தில் இருந்தே படத்தின் மீது பெரும் நம்பிக்கை ரசிகர்களுக்கு ஏற்பட்டது. குறிப்பாக ராதிகா மாதிரியான ஒரு சீனியர் நடிகை மையக் கதாபாத்திரமாக அதுவும் 80 வயது மூதாட்டி கதாபாத்திரத்தில் நடித்தது பலரது கவனத்தை ஈர்த்தது. ராதிகாவின் மேக்-அப்பிற்காக உலகநாயகன் கமல்ஹாசனை அணுகி அவரிடம் ஆலோசனை பெற்றுள்ளனர்.

Thai Kizhavi Deleted Scene Goes Viral Singampuli Comedy on Bigg Boss Tamil Hosts Sparks Laughter
Photo Credit:

விமர்சனம்: படத்தில் ராதிகாவின் கதாபாத்திரம் ஒரு வகையில் பெண்கள் தங்களது சுய சம்பாத்தியத்தில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து பேசுகிறது என்றாலும், கந்து வட்டிக்கு விட்டு அதை வசூலிக்கும் முறை என்பது மிகவும் மூர்க்கத்தனமாக இருக்கிறது என்ற விமர்சனங்களும் அதிகம் வரத்தான் செய்தது. காரணம் கந்துவட்டி காரணமாக தமிழ்நாட்டில் குடும்பத்துடன் உயிரை மாய்த்துக் கொண்டவர்கள் ஏராளம் என்பதால் இந்த விமர்சனம் பரவலாக முன் வைக்கப்பட்டது.

டெலிட்டேட் சீன்: அதே நேரத்தில் படத்தை மிகவும் நகைச்சுவையாக நகர்த்திக் கொண்டு சென்ற விதம் பலராலும் பாராட்டப்பட்டது. படம் கிராமங்களில் மட்டுமல்லாமல் பெருநகரங்களிலும் நன்றாகவே வசூல் செய்தது. இப்படி இருக்கையில் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதைப் பார்த்த பலரும் இந்த காட்சி நன்றாக உள்ளதே. இதை படத்தில் வைத்திருக்கலாமே? ஏன் வைக்கவில்லை, என்று எல்லாம் கேள்வி கேட்டு வருகிறார்கள். மேலும் இணையவாசிகள் பலரும், அழ வைத்துவிட்டு கடைசியாக சிரிக்க வைத்துவிட்டீர்களே என்றும் பேசி வருகிறார்கள். குறிப்பாக இந்த நீக்கப்பட்ட காட்சியில் நடிகர் சிங்கம் புலி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமல்ஹாசன் வெளியேறி, விஜய் சேதுபதி வருவதைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுத காட்சி குபீர் சிரிப்பை வரவழைத்துவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X