அறிவிப்புக்கு முன்பே வைரலாகும் அப்டேட்கள்... தலைவர் 169 படம் தேனி, மதுரையில் நடைபெறுவதாக தகவல்
சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில் அண்ணாத்தே திரைப்படம் தீபாவளியையொட்டி வரும் நவம்பர் 4ம் தேதி ரிலீசாக உள்ளது.
இதையடுத்து ரஜினிகாந்த் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட்டிற்காக அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமலேயே அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியானவண்ணம் உள்ளன.

தீபாவளி ரிலீஸ்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்தே படம் தீபாவளி ரிலீசாக வரும் நவம்பர் 4ம் தேதி வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் சிவா இயக்கியுள்ள இந்த படத்தில் குஷ்பூ, மீனா, நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் வழக்கம் போல மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
படத்தின் அடுத்தடுத்த ட்ரெயிலர் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரிலீஸ் தேதியை மட்டுமே சன்பிக்சர்ஸ் உறுதி செய்துள்ளது. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை எப்போது வெளியாகும் என்ற அப்டேட் இன்னும் வெளியிடப்படவில்லை.

வைரலாகும் அப்டேட்கள்
இதனிடையே, அண்ணாத்தே படத்தின் வெளியீட்டிற்கு முன்பே ரஜினியின் அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அடுத்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி அகோரத்திற்காக அவர் நடித்து கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

தேசிங்கு பெரியசாமி இயக்கம்?
மேலும் இந்த படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் புகழ் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி -மதுரையில் படப்பிடிப்பு?
இந்நிலையில் தற்போது தலைவர் 169 படத்தின் பெரும்பகுதி சூட்டிங் தேனி மற்றும் மதுரை மாவட்ட எல்லையில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்ணாத்தே படம் ஏற்படுத்தியுள்ள எதிர்பார்ப்பில் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அடுத்தபடம் குறித்த அறிவிப்பும் அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











