Miss World: மனசு வைத்த சோனு சூட்.. உலக அழகி பட்டத்தை தட்டி தூக்கிய தாய்லாந்தின் ஓபல் சுசாட்டா!

ஹைதராபாத்: பியூட்டி வித் பர்பஸ் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கடந்த 1951ஆம் ஆண்டில் இருந்து உலக அழகிப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொள்கிறார்கள். இம்முறை நடைபெற்ற 72 வது உலக அழகிப் போட்டியில் மொத்தம் 108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

இந்த உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் நந்தினி குப்தா கலந்து கொண்டார். இவர் டாப் 20 இடங்களில் இடம் பெற்றிருந்தார். ஆனால் அடுத்தடுத்த கட்டங்களில் இவரால் முன்னேற முடியவில்லை. இம்முறை உலக அழகி பட்டத்தை வென்றுள்ள ஓபல் சுசாட்டா போட்டியின் நடுவர்கள் மட்டுமல்லாமல் இந்த போட்டியை உற்று நோக்கி வருகிற பலரது கவனத்தை ஈர்த்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Thailand Opal Suchata Named As 72nd Miss World 2025 Sonu Sood Play Major Role In Final Round

ஓபல் சுசாட்டா 23 வயது இளம்பெண். இவர் கல்லூரி மாணவியாகவும் உள்ளார். சர்வதேச விவகாரங்கள் குறித்து படித்து வரும் ஓபல் சுசாட்டாவுக்கு இரு நாடுகளுக்கு இடையிலான தூதுவராக மாறவேண்டும் என்பதுதான் ஆசை என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த நோக்கம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. சைக்காலஜி மற்றும் ஆந்தரபாலஜி அதாவது மனநல ஆரோக்கியம் மற்றும் மானுடவியல் படிப்புகள் மீது தனக்கு ஆர்வம் இருப்பதாக தெரிவித்ததும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான இறுதிச் சுற்றில் மொத்தம் நான்கு நாட்டினைச் சேர்ந்தவர்கள் போட்டி போட்டார்கள். இதில் தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசாட்டா முதலிடத்தை வென்றார். அதேபோல் இரண்டாவது இடத்தை, எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹஸெட் டெரிஜி வென்றார். மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை போலந்தை சேர்ந்த மஜா லாஜா மற்றும் மார்டினிகைச் சேர்ந்த ஆரேலியா ஜோச்சேம் வென்றார்கள். தாய்லாந்து நாட்டில் இருந்து தேர்வு செய்யப்படும் முதல் உலக அழகி ஓபல் சுசாட்டா என்பதால் பலரது கவனம் அவர் மீது விழுந்துள்ளது. இது மட்டுமில்லாமல் இவரிடம் கடைசிச் சுற்றில் கேள்வி கேட்டவர் பாலிவுட் நடிகர் சோனு சூட் ஆவார். இவர் அளித்த மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே இவருக்கு உலக அழகிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Thailand Opal Suchata Named As 72nd Miss World 2025 Sonu Sood Play Major Role In Final Round

அதேபோல் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணா கிராவிடெஸ் மிஸ் வோர்ல்ட் ஆசியா பட்டத்தை வென்றார். இவர்களின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் குறித்த தகவல்களை இணையவாசிகள் அதிகம் தேடி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X