சூரசம்ஹாரம்.. நாளை மனிதன் படங்களில் நடித்த.. தக்காளி சீனிவாசன் காலமானார்
சென்னை: தயாரிப்பாளர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட தக்காளி சீனிவாசன் உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரில் காலமானார். அவரது இறுதி சடங்கு மார்ச் 11ந் தேதியான இன்று பெங்களுரில் நடைபெறவுள்ளது
தக்காளி சீனிவாசன் இவர்கள் வருங்கால தூண்கள், மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன், ஜென்ம நட்சத்திரம் அதிசய மனிதன், விட்னஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்து வெற்றி கண்ட தயாரிப்பாளராக திகழ்ந்த இவர். நடிகராக கமல்ஹாசன் நடித்த சூரசம்ஹரம் திரைப்படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும்,மனசுக்குள் மத்தாப்பு, நாளைய மனிதன் போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தக்காளி சீனிவாசன்: வயது மூப்பு காரணமாக சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த தாக்களி சீனிவாசன். ஒரு ஆசிரமம் நடத்தி, தத்தெடுத்த குழந்தைகளுடன் மனிதநேய சேவையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் திடீரென நேற்று அவர் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு மார்ச் 11ந் தேதியான இன்று பெங்களுரில் நடைபெறவுள்ளது. இவரின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











