தல 55 படத்துக்கு 3 பாட்டு ரெடியாம்.. ஹாரீஸ் ரொம்ப பாஸ்ட்டுதான்!!
சென்னை: கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் தல55 படத்துக்கு 3 பாடல்கள் தயாராகி விட்டதாகத் தெரிவித்துள்ளார் அப்படத்தின் இசையமைப்பாளர் ஹரீஸ் ஜெயராஜ்.
இப்படத்தின் மூலம் அஜீத் முதன்முறையாக கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். சமீபகாலமாக சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் நடித்து வந்த அஜீத், நீண்ட காலத்திற்குப் பிறகு இப்படத்தில் கருமையான முடியுடன் இளமையான தோற்றத்தில் நடித்து வருகிறார்.
இன்னும் அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்படாத இப்படத்தைத் தற்போதைக்கு தல 55 என்றே குறிப்ப்பிட்டு வருகின்றனர்.

இரு நாயகிகள்...
இப்படத்தில் அஜீத்திற்கு இரண்டு நாயகிகள் உள்ளனர். ஒருவர் அனுஷ்கா, மற்றொருவர் த்ரிஷா.

முதல் முறையாக அனுஷ்கா...
த்ரிஷா முன்னதாக கிரீடம், மங்காத்தா உள்ளிட்ட படங்களில் அஜீத் ஜோடியாக நடித்துள்ளார். ஆனால், முதன்முறையாக இப்படத்தில் அஜீத் ஜோடியாகிறார் அனுஷ்கா.

தந்தையாக அஜீத்...
இப்படத்தில் அஜீத் ஒரு குழந்தையின் தந்தையாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பிளாஷ்பேக் காட்சிகளில் மட்டுமே த்ரிஷா வருகிறாராம்.

ஸ்டைலான போட்டோக்கள்...
கடந்த விநாயகர் சதுர்த்தியன்று இப்படத்தின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதில் படு ஸ்டைலாக காட்சியளிக்கும் அஜித்தின் தோற்றம் அவரது ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது.

தீபாவளி ரிலீஸ்...
சமீபத்திய தகவலின்படி, அஜித் படத்தின் டைட்டிலையும், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரையும் வருகிற தீபாவளி பண்டிகை அன்று வெளியிட படக்குழுத் திட்டமிட்டுள்ளனராம்.

3 பாடல் ரெடி...
இந்நிலையில், அஜீத் படத்தின் மூன்று பாடல்கள் தயாராகி இருப்பதாக இப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பொங்கல் ரிலீஸ்..?
இதை வைத்துப் பார்க்கும் போது, வீரம் படத்தைப் போன்று தல 55 படமும் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











