‘தல 59’.. பரபரப்பை ஏற்படுத்திய புதிய போஸ்டர்.. யார் செய்த வேலை இது?

அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

Recommended Video

தல 59 படத்தில் அஜித் நடிக்கும் வித்யா பாலன் நடிக்கிறார்- வீடியோ

சென்னை: வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்திற்கு ரசிகர்கள் அதிகாரம் எனத் தலைப்பு வைத்து, போஸ்டர் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் இரண்டு வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடி வருகிறது. வசூலிலும் பல சாதனைகளைப் படைத்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, தனது அடுத்த பட வேலையை நடிகர் அஜித் தொடங்கி விட்டார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிப்பில் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய வினோத் இயக்கத்தில் அவர் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

பிங்க் ரீமேக்:

பிங்க் ரீமேக்:

இப்படம் பாலிவுட்டில் பெரும் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன். அதோடு, ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோரும் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகர்களாக அறிமுகம் ஆகின்றனர். இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

புதிய போஸ்டர்:

புதிய போஸ்டர்:

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தினை ‘தல 59' என்றே படக்குழுவினரும், ரசிகர்களும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்நிலையில், தல ரசிகர்கள் சிலர் இப்படத்திற்கான போஸ்டரை தாங்களாகவே உருவாக்கியுள்ளனர்.

வக்கீலாக அஜித்:

வக்கீலாக அஜித்:

அதில், வழக்கறிஞர் உடையில் அஜித் இருக்க, அவருடன் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்- நடிகைகளின் புகைப்படங்கள் உள்ளது. கூடவே, படத்தின் தொழில்நுட்பக் குழுவின் விபரமும் இந்த போஸ்டரில் உள்ளது. படத்தின் தலைப்பாக அதிகாரம் என ரசிகர்கள் வைத்துள்ளனர்.

வைரலாகும் போஸ்டர்:

வைரலாகும் போஸ்டர்:

அதிகாரம் என்ற வார்த்தையையும் அவர்கள் சாதாரணமாக டிசைன் செய்யவில்லை. வழக்கறிஞரின் உடை, சிறைக் கம்பிகள் என சில குறியீடுகளுடனேயே உருவாக்கியுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X