தல 59... ஸ்ரீதேவியின் ஆசையை அஜித் நிறைவேற்றிவிட்டார்.. போனிகபூர் உருக்கம்!
தல 59 படத்தை தயாரிப்பது தனக்கு பெருமையான விஷயம் என மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: தல 59 மூலம் தனமது மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை அஜித் நிறைவேற்றிவிட்டதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
பேவியூ புராஜெக்ட்ஸ் எல்எல்பி நிறுவனத்தின் தல 59 படத்தை தயாரிக்கிறார் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். விமர்சன ரீதியாக பாராட்டுக்களையும் மற்றும் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் செய்த பிங்க் இந்தி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் இது.
'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் மூலம் பாராட்டுக்களை குவித்த ஹெச். வினோத் இந்த படத்தை இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இறுதி செய்யப்பட்ட பின் விரைவில் அறிவிக்கபடுவார்கள். இந்த படம் நேற்று அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது.

ஸ்ரீதேவியின் விருப்பம்
இந்த படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில், "இங்கிலீஷ் விங்கிலீஷ்' படத்தில் அஜித்குமார் உடன் இணைந்து பணியாற்றிய போது, எங்கள் தயாரிப்பில் தமிழில் அவர் ஒரு திரைப்படம் நடிக்க வேண்டும் என ஸ்ரீதேவி விரும்பினார். கடந்த ஆண்டு வரை நல்ல கதை ஒன்றும் கிடைக்கவில்லை.

அஜித்தின் எண்ணம்
ஒரு நாள் அஜித் பிங்க் படத்தை ரீமேக் செய்யும் எண்ணத்தை தெரிவித்தார். அஜித் அந்த படத்தில் நடித்தால், அதை ஒரு சிறந்த படமாக உருவாக்க முடியும் என ஸ்ரீதேவியும் உடனடியாக அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டார்.

பெருமையாக நினைக்கிறேன்
தென்னிந்திய சினிமா துறையில், குறிப்பாக தமிழ் சினிமாவில் சினிமா தயாரிப்பை மேற்கொள்வதை நான் பெருமையாக கருதுகிறேன். அஜித் என் மனைவி ஸ்ரீதேவியுடன் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் நடித்த காலத்தில் இருந்தே நானும் அஜித்தும் ஒரு படத்தில் இணைய மிகுந்த ஈடுபாட்டுடன் காத்திருந்தோம். நாங்கள் இருவருமே எங்கள் இருவரது கேரியரிலும் சிறப்பு சேர்க்கும் ஒரு பொருத்தமான கதையை தேடினோம். 'பிங்க்' படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்கில் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

அஜித் பிறந்தநாளில் தல 59
2019ஆம் ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இன்னொரு படத்தையும் தயாரிக்கிறோம். அது 2019 ஜூலையில் துவங்கி, 2020 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டு படங்களும் ஜீ நிறுவனம் ஆதரவுடன் தயாராகின்றன. அவருடன் பணிபுரியும் மிகச்சிறந்த அனுபவத்தை நான் எதிர்பார்க்கிறேன்.

இயக்குனர் வினோத்த்தின் படைப்புகள்
இயக்குனர் வினோத்தின் படைப்புகளை நான் பார்த்திருக்கிறேன். மிகச்சிறந்த திரைப்படங்களை கொடுத்து வருகிறார். குறிப்பாக, அவரது முந்தைய படமான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை மிகவும் யதார்த்தமாக எடுத்திருந்தது என்னை வியப்பில் ஆழ்த்தியது. தனித்துவமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை தனது சிறந்த கதை சொல்லல் மூலம் சிறப்பாக செய்யும் அவர் தான் தமிழ் மொழியில் 'பிங்க்' படத்தை இயக்க சரியான நபராக இருப்பார் என நான் உறுதியாக நம்புகிறேன்", என அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











