“இது தான் தல 59 ரிலீஸ் தேதி”.. பூஜை போட்ட கையோடு ரசிகர்களுக்கு ‘குட் நியூஸ்’ சொன்ன போனிகபூர்!
தல 59 படம் எப்போது ரிலீசாகும் என இப்போதே அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: அஜித் நடிக்கும் பிங்க் பட ரீமேக்கான தல 59 ரிலீஸ் தேதி பற்றி பேசியுள்ளார் அப்படத்தின் தயாரிப்பாளரும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர்.
விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் அஜித். இப்படத்தை ஸ்ரீதேவியின் கணவரும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரிக்கிறார்.
இப்படம் பிங்க் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

ஏமாற்றிய அப்டேட்கள்:
பொதுவாகவே அஜித் படங்களின் அப்டேட்களை அவரது ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் வெறுத்துப் போகும் விதமாகவே சமீபகாலமாக அஜித் பட அப்டேட்கள் நீண்டநாட்களாக வராமல் இழுத்தடிக்கப்பட்டது.

விஸ்வாசம் திருவிழா:
படக்குழு இதற்கு பல்வேறு காரணங்கள் சொன்னாலும், அஜித் ரசிகர்கள் அப்டேட்கள் வராமல் அதிகம் ஏமாற்றமடைந்தது மறுக்க முடியாத உண்மை. விஸ்வாசம் அப்டேட் கேட்டு அவர்கள் போராட்டம் நடத்தாதக் குறை தான். இதனாலேயே அப்படம் தொடர்பான அப்டேட்களை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் விஸ்வாசத்தைக் கொண்டாட இப்போதே தயாராகி வருகின்றனர்.

புதிய பட பூஜை:
இந்நிலையில், தனது அடுத்தப்பட வேலையைத் தொடங்கி விட்டார் அஜித். நேற்று இப்படத்தின் பூஜை ஆரம்பித்து விட்டது. பூஜை போட்ட கையோடு அப்படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர், தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு செய்தியைத் தந்துள்ளார்.

ஒரே ஆண்டில் 2 படங்கள்:
அதாவது, அடுத்தாண்டு அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படம் ரிலீசாகும் என அவர் தெரிவித்துள்ளார். அஜித் படத்திற்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்தது போக, அடுத்தாண்டே ஜனவரியில் விஸ்வாசமும், மே மாதத்தில் தல 59 படமும் ரிலீசாவதால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











