#Thala59 படத்திற்கு பூஜை போட்டாச்சு: சிவா மாதிரி மட்டும் இருக்காதீங்க வினோத்
Recommended Video

சென்னை: தல 59 படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ளது.
தல தயவு செய்து அந்த சிவாவை கைவிடுங்கள் என்று ரசிகர்கள் கதறிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தான் அவர் விஸ்வாசம் படத்தை அடுத்து ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
பிங்க் இந்தி படத்தின் ரீமேக்கான இதை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இது தொடர்பாக அவர் சென்னை வந்து வினோத் மற்றும் அஜித்தை சந்தித்து பேசினார்.
பூஜை
தல 59 படத்தின் பூஜை நடத்தப்பட்டது. பூஜையின்போது மறைந்த ஸ்ரீதேவியின் புகைப்படத்தை வைத்து மாலையிட்டனர். ஸ்ரீதேவி அஜித் மீது அதிக மதிப்பு வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு பூஜை போட்டபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் வினோத்.

ரீமேக்
பிங்க் இந்தி படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் நடிக்கிறார். பிற நடிகர்கள், நடிகைகள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியே ரீமேக் செய்யாமல் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போன்று லைட்டாக மாற்றி எடுக்கிறாராம் வினோத்.
அஜித்
ஹெச். வினோத், அஜித் இணையும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. படத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஜனவரியில் விஸ்வாசம், அதன் பிறகு இந்த படமா?. தல ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தான்.

அப்டேட்
சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் போன்று இல்லாமல் தல 59 பற்றி அவ்வப்போது அப்டேட் கொடுக்குமாறு வினோத் மற்றும் போனி கபூருக்கு அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விஸ்வாசம் பற்றி அப்டேட் கேட்டு கேட்டு ஓய்ந்து போனதால் தற்போது இப்படி ஒரு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











