Nerkonda Paarvai: அஜித்தின் புதிய படத்தின் பெயர்... நேர்கொண்ட பார்வை!
சென்னை: வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்திற்கு நேர்கொண்ட பார்வை என தலைப்பு கைக்கப்பட்டுள்ளது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்தியில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் தான் இது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

அஜித் நடிக்கும் 59வது படம் இது. இப்படத்தில் அவர் வழக்கறிஞராக நடிக்கிறார். கடந்த பொங்கல் பண்டிகைக்கு வெளியான விஸ்வாசம் சூப்பர் டூப்பர் ஹிட்டானதால், இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் படத்தின் தலைப்பு 'நேர்கொண்ட பார்வை' என்பது தெரியவந்துள்ளது. பாரதியார் பெண்களை பற்றி பாடிய கவிதையின் முதல் வரியில் இருந்து தான் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் அஜித், வழக்கம் போல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில், வழக்கறிஞர்கள் உடையில் தோன்றுகிறார். மேலும், ஸ்ரத்தா உள்ளிட்ட மூன்று முக்கிய நடிகைகள் நீதிமன்றக் கூண்டுக்குள் நிற்கின்றனர். பர்ஸ்ட் லுக் போஸ்டரே படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறது. இப்படம் வரும் மே 1ம் தேதி அஜித் பிறந்த தினத்தன்று வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications











