twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தல 60.. சத்தமில்லாமல் ஷூட்டிங்கை ஆரம்பித்த போனி கபூர்... டாப் ஆங்கிள்லயும் அஜித் மாஸ் தான்..!

    அஜித் நடிக்கும் தல 60 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

    |

    Recommended Video

    Ajith's Birthday: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நிகழ்ச்சி- வீடியோ

    சென்னை: தல 60 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

    அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பாஸ் ஆபிசிலும் நல்ல வசூல் செய்தது.

    Thala 60: Is the shooting started with pooja?

    பிங்க் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையை இயக்கியது எச்.வினோத். இப்படத்தை தயாரித்தது போனி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் ஆசைக்காக அஜித் இந்த படத்தில் நடித்தார்.

    "ஜெயா-னு தலைப்பு வேண்டாமே.." விஜய்யிடம் கேட்டுக்கொண்ட 'தலைவி' கங்கணா.. ஏன் தெரியுமா?

    நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடிக்கவுள்ள படத்தையும் எச்.வினோத் தான் இயக்குகிறார். போனி கபூர் தான் தயாரிக்கிறார். இப்படம் முழுக்க முழுக்க வினோத்தின் கற்பனையில் உருவாக்கப்பட்டுள்ள கதையை அடிப்படையாக கொண்டது. கார் ரேசர் மற்றும் போலீஸ் அதிகாரியாக அஜித் இப்படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

    மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக ஆகியிருக்கிறார். அந்த போட்டோக்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலானது. தல 60 என இப்படத்திற்கு தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.

    இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சத்தமில்லாமல் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    இந்த ஒரு போட்டோவும், தகவலும் போதாதா? உடனே தல ரசிகர்கள் தல 60 என ஹேஷ்டேக் போட்டு டிவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர். ஆனால் இதுகுறித்து பட தயாரிப்பு எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A photo is viral in social medias that actor Ajith's next movie Thala 60 shooting started today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X