‘தல 60’ பட பூஜை… சத்தமே இல்லாமல் நடத்த திட்டமா?

அஜித்தின் ‘தல 60’ படத்தின் ஆரம்ப பூஜை சென்னையில் நாளை போடப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சென்னை: போனிகபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில் உருவான நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதே கூட்டணியில் உருவாகவுள்ள 'தல 60' படத்தின் பூஜை நாளை சென்னையில் சிம்பிளாக நடக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பாலிவுட் படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான நேர்கொண்ட பார்வை நல்ல வரவேற்பை பெற்றது.

‘Thala 60’ Pooja will be held in Chennai tomorrow news leaked?

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய இரு படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்திய எச். வினோத் இயக்கத்தில், அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே என நட்சத்திர பட்டாளமே நடித்த நேர்கொண்ட பார்வை, பெண்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி வாகை சூடியது.

நேர்கொண்ட பார்வை ஹிட் அடித்த நிலையில், மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'தல 60' படம் உருவாக உள்ளது.

இந்த படத்திற்கான ப்ரீ - புரடொக்‌ஷன் பணிகள் இரு மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்திற்கான ஷூட்டிங் பணிகளை துவங்கும் பணிகள் நாளை பட பூஜையுடன் துவங்கவுள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், நாளை சென்னையில் பூஜை முடித்த கையுடன் அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யின் பிகில் குறித்த அப்டேட்கள் சமூக வலைதளத்தை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், நாளை அஜித் படத்தின் பட பூஜை புகைப்படங்கள் வெளியானால், அஜித் ரசிகர்கள் சமூக வலைதளத்தை ஆட்சி செய்ய வேண்டும் என்ற தீவிர முனைப்புடன் ஈடுபட்டு இந்திய அளவில் அதனை டிரெண்டிங் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

'தல 60' படத்தில் என்னை அறிந்தால் படத்தில் முறுக்கு மீசையுடன் கம்பீரமான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த லுக்கிற்கே அஜித் மீண்டும் மாறியுள்ள புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

மேலும், அடுத்ததாக 'தல 61' மங்காத்தா 2 என்றும் வெங்கட் பிரபு சொன்ன கதைக்கு அஜித் ஓகே சொல்லியுள்ளார் என்ற தகவலும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Read more about: thala 60 ajith kumar தல 60
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X