அஜித் ரசிகர்களுக்கு வாழ்வு தான்: இந்தாங்க நீங்க கேட்காமலேயே 'தல 60' அப்டேட்

By Siva

சென்னை: தல 60 படத்தின் ஷூட்டிங் எப்பொழுது துவங்குகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 10ல் இருந்து ஜூலைக்கு மாற்றிவிடலாமா என்று தயாரிப்பாளர் போனி கபூர் யோசனையில் உள்ளாராம்.

Thala 60 to be launched on August 29th

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் மீண்டும் நடிக்கும் தல 60 படம் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

தல 60 படத்திற்கு வரும் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி பூஜை போட திட்டமிட்டுள்ளார்களாம். படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்குமாம். படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் வினோத். இந்த படத்தில் அஜித் கார் பந்தய வீரராக வரக்கூடும் என்று கூறப்படுகிறது.

இது வினோத் அஜித்துக்காக பார்த்து பார்த்து எழுதிய ஆக்ஷன் கதையாம். இயக்குநர் சிவாவிடம் அப்டேட் கேட்டு கெஞ்சிக் கதறி, திட்டி, டயர்டானார்கள் அஜித் ரசிகர்கள். இந்நிலையில் வினோத்தோ கேட்காமலேயே அவ்வப்போது அப்டேட் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்.

தல ரசிகர்களுக்கு இப்படி கேட்காமல் அப்டேட் கிடைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் விஜய் ரசிகர்களோ தளபதி 63 அப்டேட் கேட்டு கெஞ்சினாலும், கதறினாலும் ஒன்றும் நடப்பதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படம் குறித்து போனி கபூர் கூறியிருப்பதாவது,

பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்ய வேண்டும் என்று ஸ்ரீதேவி விரும்பினார். அந்த ரீமேக்கில் அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் அஜித் நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். ஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது நானும், அவரும் சென்னை வந்து அஜித்தை சந்தித்து பிங்க் ரீமேக் குறித்து பேசினோம்.

அஜித்தின் நல்ல குணம், பெருந்தன்மை, பெண்கள் மீது வைத்துள்ள மரியாதை ஆகியவற்றால் இந்த படத்திற்கு அவர் தான் சரியான ஆள் என்று நினைத்தார் ஸ்ரீதேவி என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X