ஷூட்டிங் எப்போ, எங்கே, அஜித் கேரக்டர் என்ன?: தல 60 அப்டேட்ஸ்
சென்னை: தல 60 படம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவா இயக்கத்தில் நடித்தது போதும் தல என்று அஜித் ரசிகர்கள் அன்புக் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அவர் தீரன் அதிகாரம் ஒன்று படம் புகழ் ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.
அந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி வெளியாக உள்ளது. பட வேலைகளை துவங்கிய உடனேயே தலைப்பை அறிவித்துவிட்டனர். அதற்கு காரணம் அஜித்தாம். தல 59 என்று பெயர் வைத்து பேசாமல் தலைப்பை ஆரம்பத்திலேயே வெளியிடுங்கள் என்று அவர் சொன்னபடி செய்துள்ளார்கள்.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்தும் ஹெச். வினோத் இயக்கத்தில் தான் அஜித் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போதைக்கு தல 60 என்று அழைக்கப்படும் அந்த படத்தில் அஜித் கார் ரேஸ் வீரராக நடிக்கிறாராம்.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ள அந்த படத்திற்காக அஜித் ஜிம்முக்கு சென்று கடுமையாக ஒர்க்அவுட் செய்து கொண்டிருக்கிறார். படப்பிடிப்பை நான்கு கட்டங்களாக நடத்த திட்டமிட்டுள்ளாராம் வினோத். மேலும் படப்பிடிப்பை புதபெஸ்ட், தென்னாப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நடத்த உள்ளார்களாம். நேர்கொண்ட பார்வை படம் ரிலீஸாகும் அதே ஆகஸ்ட் மாதம் தான் தல 60 படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து தல 60 படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். தல 60 படத்தை அடுத்து அஜித்தை பாலிவுட்டில் ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பதே போனி கபூரின் ஆசை. அவர் தனது ஆசையை பேட்டிகளில் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனால் அஜித் பச்சைக் கொடி காட்டியது போன்று தெரியவில்லை.
தல 60 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆவலில் உள்ளனர் ரசிகர்கள். விஸ்வாசம் அப்டேட் கேட்டு சிவாவிடம் கத்திக் கதறிய தல ரசிகர்களுக்கு தற்போது கேட்காமலேயே அப்டேட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications











