தல 59 தான் ரீமேக்: தல 60 பக்கா மாஸ் படமாம்
Recommended Video

சென்னை: தல 60 முழுக்க முழுக்க மாஸ் படமாக இருக்கும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
விஸ்வாசம் படத்தை அடுத்து அஜித் ஹெச். வினோத் இயக்கத்தில் பிங்க் பட ரீமேக்கில் நடிக்கிறார், அதை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்று தெரியும்.
இந்நிலையில் தல 60 குறித்து மாஸ் தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்
தல 59 மட்டும் அல்ல தல 60 படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்கிறார். தல 60 முழுக்க முழுக்க மாஸ் படமாக இருக்கும் என்று போனி கபூர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

குஷி
தல 59 படம் சீரியஸாக இருக்குமே அது மட்டும் அல்லாமல் அது 3 பெண்களை சுற்றி நகரும். அஜித் இப்படி ஒரு படத்தில் நடிக்கிறாரே என்ற பேச்சு கிளம்பியது. இந்நிலையில் தல 60 மாஸ் படம் என்று அறிந்ததும் அவரின் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.

பொருத்தம்
சமூகத்திற்கு தேவையான கருத்தை சொல்லவே அஜித் பிங்க் பட ரீமேக்கில் நடிக்கிறார். அந்த கருத்தை சொல்ல அவரை விட பொருத்தமான ஆள் இருக்காது என்கிறார்கள் அஜித் ரசிகர்கள். சீரியஸோ, மாஸோ எதுவாக இருந்தாலும் அஜித் நடித்தால் நன்றாக இருக்கும் என்பது தல ரசிகாஸின் கருத்து.

வினோத்
தல 59 படத்தை இயக்கும் வினோத் தான் தல 60 படத்தையும் இயக்குவார் என்று கூறப்படுகிறது. தீரன் அதிகாரம் ஒன்று போன்று அஜித்துக்கும் செமயான ஒரு படத்தை அவர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











