வலிமை தள்ளிப் போனால் என்ன...வந்தாச்சு தல 61 அப்டேட் ...குஷியில் அஜித் ரசிகர்கள்
சென்னை : அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான அஜித்தின் வலிமை படம், வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய ஒரு சண்டைக்காட்சிக்காக காத்திருக்கிறது. ஸ்பெயினில் நடத்தப்பட வேண்டிய படப்பிடிப்பிற்காக அனுமதி கிடைக்காததால், படக்குழு காத்திருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்களை குஷிப்படுத்த அவரின் 50 வது பிறந்தநாளான மே 1 அன்று, வலிமை ஃபஸ்ட்லுக் வெளியிடப்படும் என கூறப்பட்டது.
ஆனால் அஜித்தின் ஃபஸ்ட்லுக்கிற்காக காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஃபஸ்ட்லுக் ரிலீஸ் தள்ளிப் போடப்படுவதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்தார். இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

ரெடியாகிறது தல 61
இதற்கிடையில் போனி கபூர் தயாரிப்பில், டைரக்டர் ஹச்.வினோத்துடன் இணைந்து அஜித் மீண்டும் ஒரு படத்தில் பணியாற்றுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தல 61 படத்திற்கான திரைக்கதை தயாராகி விட்டதாம். இந்த படத்தின் கதை அஜித்திற்கு பிடித்து விட, உடனே ஓகே சொல்லி விட்டாராம்.

ஜுலையில் படப்பிடிப்பு
ஆக்ஷன் கலந்து த்ரில்லர் படமாக உருவாக்கப்பட உள்ள இந்த படத்தின் ப்ரீ ப்ரோடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறதாம். ஜுலை மாதம் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட உள்ளதாம். அஜித்தை புதிய கோணத்தில் ஆக்ஷன் ஹீரோவாக காட்டுவதாக இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.

வலிமைக்கு முன் தல 61
ஆனால் கொரோனா சூழல் ஜுலை மாதத்தில் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இந்த படப்பிடிப்பு திட்டத்தில் மாற்றம் செய்யவும் முடிவு செய்துள்ளார்களாம். வலிமை படம் ரிலீசாவதற்கு முன்பே தல 61 படப்பிடிப்பு துவங்கி விடும் என்றே கூறப்படுகிறது.

2022 ல் தல 61 ரிலீஸ்
தல 61 படம், மிக அழுத்தமான கதையை கொண்டது என்றும், திட்டமிட்டபடி படப்பிடிப்பு துவங்கி நடைபெற்றால், 2022 ம் ஆண்டின் மத்தியில் தல 61 படம் ரிலீஸ் செய்யப்படும் என்கிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே இந்த படத்தின் படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிட்டுள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











