ஜனவரி 16ல் தல 61 படத்தின் பூஜை? விரைவில் சூட்டிங்
சென்னை : நடிகர் அஜித் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள வலிமை படம் இன்னும் சில தினங்களில் வெளியாகவுள்ளது.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படம் தற்போது வெளியாகவுள்ளது.
ஓமிக்ரான்,கொரோனா உள்ளிட்டவற்றால் தற்போது தமிழகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் கேள்விக்குறியாகியுள்ளது.

வலிமை படம்
நடிகர் அஜித்குமார், ஹுமா குரோஷி லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள படம் வலிமை. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச் வினோத் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். அந்தப் படத்தை தயாரித்துள்ள போனி கபூர் இந்தப் படத்திலும் இணைந்துள்ளார்.

இரண்டு ஆண்டுகள் கேப்
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படம் ரிலீசாக உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அஜித்தின் படம் வெளியாக உள்ளது அஜித் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் வலிமை படத்தின் ரிலீஸ் அவர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்த அப்டேட்கள்
இந்தப் படத்தின் டீசர், பாடல்கள் என அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இதையடுத்து படத்தின் எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வருகிறது. ஆயினும் கொரோனா, ஓமிக்ரான் உள்ளிட்டவை காரணமாக தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் படத்தின் ரிலீசை கேள்விக்குறியாக்கியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
இந்நிலையில், வலிமை படத்தின் ரீலீசையடுத்து அடுத்தடுத்த படங்களில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி அடுத்தடுத்து ரிலீஸ் செய்ய அஜித் திட்டமிட்டுள்ளார். தல 61 படத்தில் அஜித்துடன் எச் வினோத் மற்றும் போனி கபூர் கூட்டணியே இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அனிருத் இசை
இந்நிலையில், வேதாளம், விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் அஜித்துடன் இணையவுள்ளார் இதையடுத்து படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அனிருத். நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தல 61 படத்தின் பூஜை?
இதனிடையே, தல 61 படத்தின் பூஜை சென்னையில் வரும் 16ம் தேதி நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் சூட்டிங் ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரியில் துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











