தல 56: சிறுத்தை சிவா கதையை ஓகே சொன்ன அஜீத்
அஜீத்தின் 56 வது படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜீத் நடித்து, பொங்கல் வெளியீடாக வந்த படம் 'வீரம்'. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, மீண்டும் சிவாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார் அஜீத்.

தல 56
அஜீத், தன்னுடைய 56 வது படத்திற்கான கதையை தயார் செய்யும்படி சிவாவிடம் கூறியிருந்தார். அதன்படி, கதையை தயார் செய்துள்ள சிவா, அஜீத்திடம் காண்பித்து சம்மதம் வாங்கியிருக்காராம்.

கவுதம் மேனன் படத்தில்
அஜீத்தின் 55வது படத்தை கவுதம் மேனன் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படம் முடிந்த உடன் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை பிவிபி சினிமா தயாரிக்கிறது.

வீரம் இந்தி ரீமேக்
சிவா தற்போது ‘வீரம்' படத்தின் இந்தி ரீமேக்குக்கான கதையை ரெடி செய்துள்ளார். இந்த கதையில் நடிக்க நடிகர் சல்மான் கான் நடிக்க இருக்கிறார்.

நவம்பரில் படப்பிடிப்பு
எனினும் அஜீத்துடன் தமிழ் படத்தை முடித்துவிட்டுத்தான், ‘வீரம்' இந்தி ரீமேக்கை சிவா தொடங்குவார் என கூறப்படுகிறது. அஜீத் தன்னுடை 56 வது படத்தை நவம்பரில் தொடங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











