"தல அஜித்" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வந்த தல 57 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு "விவேகம்" என்று பெயரிட்டுள்ளனர்.
வீரம், வேதாளம் ஆகிய படங்களை அடுத்து அஜீத் மூன்றாவது முறையாக சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு 80 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இருப்பினும் ஃபர்ஸ்ட் லுக்கை கூட சிவா வெளியிடவில்லை என்ற ஏக்கத்தில் அஜித் ரசிகர்கள் இருந்தனர்.

இதனிடையே அஜித்தின் 57-வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் நிலவியது. இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படத்திற்கு 'விவேகம்' என்று பெயரிட்டுள்ளனர். தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











