எப்போதுமே தல தான் காதல் மன்னன்.. மனைவி ஷாலினியுடன் எடுத்த ரொமான்டிக் செல்ஃபி.. செம வைரல்!
சென்னை: தல அஜித் குமார் ஹாஷ்டேக் தொடர்ந்து 3 நாட்களாக டாப் டிரெண்டிங்கில் உள்ளது.
அஜித் ரசிகர் தல பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து நேற்று முன் தினம் டிரெண்ட் செய்தனர்.
நேற்று தல அஜித் சைக்கிள் ஓட்டிய போட்டோக்கள் வெளியாகி டிரெண்ட் ஆகின.

ஷாலினியுடன் செல்ஃபி
இந்நிலையில், தற்போது தனது மனைவி ஷாலினியுடன் அஜித் எடுத்துள்ள க்யூட்டான ரொமான்டிக் செல்ஃபியை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். #AjithKumar ஹாஷ்டேக் இன்றும் ட்விட்டர் டிரெண்டிங்கில் டாப்பில் இருக்கிறது.

83 ஆயிரம் ட்வீட்ஸ்
கடந்த 15 ஆண்டுகளாக தல அஜித் 30 ஆயிரம் கி.மீ., சைக்கிளிங் செய்துள்ள புதிய தகவல் வெளியான நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் நடிகர் அஜித்தின் ரியல் லைஃப் வாழ்க்கையை இன்ஸ்பிரேஷனாக ஏற்று கொண்டாடி வருகின்றனர். இதுவரை மொத்தம் 83 ஆயிரத்திற்கும் மேல் ட்வீட்கள் அந்த ஹாஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகிறது.

நியூ லுக்
போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளுக்காக மொட்டை தலையுடன் இருக்கும் நியூ லுக் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

காதல் மன்னன்
ஜெமினி கணேசனுக்கு பிறகு காதல் மன்னன் பட்டத்தை பெற்றது தல அஜித் தான். அதற்கு பிறகு எத்தனையோ இளம் ஹீரோக்கள் வந்தாலும், இன்றும் காதல் மன்னனாக கோலிவுட்டில் இருப்பது அஜித் தான் என ஷாலினியுடன் இருக்கும் க்யூட்டான செல்ஃபி புகைப்படத்தையும் நடிகர் அஜித்தின் வின்டேஜ் புகைப்படங்களையும் ஷேர் செய்து ரசிகர்கள் பூரிப்படைந்து வருகின்றனர்.
என்னோட ஆளு அஜித்
கரன்ட் ஜெனரேஷன் நடிகர்களில் ரொம்ப ஹேண்ட்ஸம் ஆன நடிகர் யார் என்கிற கேள்விக்கு பதிலளித்த நடிகை மீனா, வேற யாருமே ஞாபகம் வர மாட்றாங்க, என்னோட ஆளு அஜித் தான் என சிரித்துக் கொண்டே சொல்லும் வீடியோவையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

இனி தினமும் டிரெண்டிங்
வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஒட்டுமொத்த சோஷியல் மீடியாவையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அஜித் ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர். தினமும் இனி அஜித் பற்றி லேட்டஸ்ட் அப்டேட் மற்றும் போட்டோக்களுடன் ஹாஷ்டேக் டிரெண்ட் ஆகும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











