கன்னடத்தில் 'கமாண்டோ'வாகிய விவேகம்: தெறிக்கும் டீஸர்

தல அஜித்தின் கமாண்டோ திரைப்பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பெங்களூரு: தல அஜித்தின் கமாண்டோ திரைப்பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓபராய், அக்‌ஷரா ஹாசன் மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விவேகம். இந்த படம் கன்னடத்தில் கமாண்டோ என்று மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Thala Ajith commando teaser!

வெறும் 17 நொடிகளே ஓடக்கூடிய டீசரை சோனி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. அதில் படத்தின் சில முக்கிய காட்சிகள் காட்டப்படுகின்றன. அஜித் பாலத்தில் நிற்பது, பைக் ஸ்டண்ட் செய்து துப்பாக்கியால் சுடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு கர்நாடகாவில் உள்ள அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் திரைப்படம் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அஜித்தின் ஆரம்பம் படம் வெளியானது. இப்போது விவேகம் திரைப்படம் வெளியாக உள்ளது.

ஹரிவு கிரியேஷன் என்ற நிறுவனம் கமாண்டோ திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுகிறது. இன்னும் சில தினங்களில் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து பட ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X