கார் ரேஸ்.. பைக் ரேஸ் மட்டுமில்ல.. சைக்கிளிங்கிலும் தல கெத்துடோய்.. டிரெண்டாகும் #AjithKumar
சென்னை: தல அஜித்தின் சைக்கிளிங் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன.
#AjithKumar என்கிற ஹாஷ்டேக்கில் நடிகர் அஜித் செம கேஷ்வலாக சைக்கிள் ஓட்டும் ஏகப்பட்ட புகைப்படங்களை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.
ஹைதராபாத்தில் வலிமை படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் அஜித் காலை நேர உடற்பயிற்சியாக சைக்கிளிங் செய்து வருவது இதன் மூலம் தெரிய வருகிறது.

சைக்கிள் ஓட்டும் தல
கார் ரேஸ், பைக் ரேஸ் என ஓட்டி தமிழ் நாட்டு ரசிகர்களை கவர்ந்த நடிகர் அஜித் இப்போ ஹைதராபாத்தில் கூலாக ஆள் அடையாளம் தெரியாமல், சாதாரணமாக சாலைகளில் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.

ஹாஷ்டேக் டிரெண்டிங்
தல அஜித் சைக்கிள் ஓட்டும் புகைப்படங்கள் வரிசையாக வெளியாக #AjithKumar என்கிற ஹாஷ்டேக்கை தல ரசிகர்கள் வெறித்தனமாக டிரெண்ட் செய்து வருகின்றனர். செம ஃபிட்டாக தல அஜித் போஸ் கொடுத்து நிற்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் சொக்கிப் போயுள்ளனர்.

தரையில் அமர்ந்து
தமிழ்நாடு மட்டுமின்றி நடிகர் அஜித்தை தல என கோடிக்கணக்கான ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வரும் நிலையில், செம கேஷுவலாக எந்தவொரு பந்தாவும் இன்றி தரையில் அமர்ந்து இருக்கும் புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் ரசிகர்கள் மேலும் தீவிர தல வெறியன்களாக மாறுவதில் சந்தேகமே இல்லை.

ரவுண்டு கட்டி ஆடும் தல
ஏற்கனவே பைக் ரேஸ், கார் ரேஸ், ட்ரோன், போட்டோகிராஃபி, சமையல் என சகல கலா வல்லவனாக இருக்கும் தல அஜித் தற்போது ரைஃபிள் ஷூட்டிங், சைக்கிளிங் என ரவுண்டு கட்டி ஆடி தனது ரசிகர்களை வேற லெவல் கொண்டாட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

அப்டேட்டே வேண்டாம்
நடிகர் அஜித்தின் இத்தனை போட்டோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வைரலாகி உள்ள நிலையில், வலிமை படத்தின் அப்டேட் கூட வேண்டாம் என ஏகப்பட்ட அஜித் ரசிகர்கள், நடிகர் அஜித்தின் இந்த போட்டோக்களையே அப்டேட்டாக நினைத்து தங்களது மொபைல் வால் பேப்பர்களை மாற்றி வருகின்றனர்.

நேற்று சோகத்தில்
நடிகர் அஜித்தின் ரசிகரான தல பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த தல ரசிகர்கள் நேற்று ஏகப்பட்ட கண்ணீர் அஞ்சலி ட்வீட்களை போட்டு சோகத்தில் இருந்தனர். இந்நிலையில், தல அஜித் ரசிகர்களின் மனநிலையை மாற்றவே இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











