சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.. வேற மாறி தெறிக்கவிடும் தல ரசிகர்கள்.. #ValimaiPongal
சென்னை: சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் பிப்ரவரிக்கு தள்ளிப் போன நிலையில், தல ரசிகர்கள் #ValimaiPongal ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.
வரும் பொங்கல் பண்டிகைக்கு சோலோ ரிலீசாக தல அஜித்தின் வலிமை திரைப்படம் வரப் போகிறது என அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
அஜித் மற்றும் சூர்யா என இரு பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே நேரத்தில் வெளியானால் வசூல் பாதிப்பு ஏற்படும் என்பதால் சன் பிக்சர்ஸ் சூர்யா படத்தை தள்ளிப் போட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

தல பொங்கல்
தீபாவளிக்கு ரஜினிகாந்தின் அண்ணாத்த, விஷாலின் எனிமி மற்றும் சூர்யாவின் ஜெய்பீம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான நிலையில், வரும் பொங்கல் பண்டிகைக்கு தல அஜித்தின் வலிமை திரைப்படம் சோலோ ரிலீசாக கலந்து கொள்ளப் போவதாக அஜித் ரசிகர்கள் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விலகிய சூர்யா
பொங்கல் போட்டியில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் கலந்து கொள்ளும் என சூர்யா ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருந்த நிலையில், திரைத்துறையினருடன் இப்போதைக்கு போட்டி வேண்டாம் என்கிற முடிவை நடிகர் சூர்யா எடுத்துள்ள காரணத்தால் அந்த படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது எனக் கூறுகின்றனர்.

அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் வரும் பொங்கலுக்கு போட்டியில்லை என்று தெரிந்ததும் ஒட்டுமொத்தமாக 900 திரையரங்குகளிலும் தல அஜித்தின் வலிமை படத்தை ரிலீஸ் செய்து விடலாம் என்றும் வசூலில் வேற லெவல் பிளாக்பஸ்டர் செய்து முந்தைய ரெக்கார்டுகளை தல அஜித் முறியடிப்பார் என்றும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்
தல அஜித்தின் வலிமையுடன் போட்டியிட்டால் வசூல் பாதிக்கும் என தெரிந்தே சன் பிக்சர்ஸ் இந்த புத்திசாலியான முடிவை எடுத்துள்ளது என்றும் சோலோ ரிலீசாக தல வரப் போகிறார். சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என ஏகப்பட்ட மீம்களை போட்டு அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பெரிய பிரச்சனை இருக்கு
பாகுபலி திரைப்படம் வெளியான போது தமிழ், இந்தி, தெலுங்கு என அத்தனை மொழிகளில் வெளியான படங்களின் வசூலையும் முடக்கி அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் படம் வலிமையுடன் மோதவில்லை என்றாலும் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் படம் அதிக திரையரங்குகளை தமிழ்நாட்டிலும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பிரபாஸின் ராதே ஷ்யாம் மற்றும் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா படங்களும் அஜித் படத்துக்கு வசூல் ரீதியாக தொல்லை கொடுக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











