மீண்டும் விபத்தில் சிக்கிய தல அஜித்.. கொட்டும் மழையில் நடந்த வலிமை ஷூட்டிங்.. நடந்தது இதுதானாம்!

சென்னை: ஆந்திராவில் நடந்த வலிமை படப்பிடிப்பில் தல அஜித்துக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் அஜித்தின் வலிமை ஷூட்டிங் தொடங்கியுள்ளது.

போனி கபூர் தயாரிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரோஷி நடித்து வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து

ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து

கொரோனா லாக்டவுன் போடுவதற்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற ஷூட்டிங்கின் போது, பைக் ஸ்டன்ட் செய்யும் காட்சியில், பைக்கில் இருந்து இடறி விழுந்து நடிகர் அஜித்துக்கு காலில் அடிபட்டது. ஆனாலும், ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு தல அஜித் ஓய்வெடுத்தார்.

ஹாஷ்டேக் டிரெண்டிங்

ஹாஷ்டேக் டிரெண்டிங்

#GetWellSoonThala என்ற ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து, தல அஜித் சீக்கிரம் குணமாக வேண்டி பிரார்த்தனைகளை செய்தனர். ஆனால், பெரிய காயம் ஏதுமில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக, மேனேஜர் சுரேஷ் சந்திராவின் மகள் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஆறுதல் அடைய செய்தார்.

ஆந்திராவில் ஷூட்டிங்

ஆந்திராவில் ஷூட்டிங்

வெளிநாடுகளில் எடுக்க வேண்டிய ஷூட்டிங் கொரோனா காரணமாக எடுக்க முடியாத நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பெரிய செட் போட்டு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், நடிகர் அஜித்துக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் மீண்டும் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.

கையில் காயம்

கையில் காயம்

தல அஜித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆயுர்வேத சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என ஏகப்பட்ட தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் விசாரித்தபோது, பெரிய விபத்து இல்லை என்றும், கையில் லேசான காயம் மட்டுமே, ஆனால், ஷூட்டிங் ஏதும் தடைபடவில்லை என்றார்.

மழையில் ஷூட்டிங்

மழையில் ஷூட்டிங்

கொட்டும் மழையில் படப்பிடிப்பு நடக்கும் போது, அஜித் ஓட்டிக் கொண்டு சென்ற பைக் சறுக்கி விழுந்ததில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். ஒரு வார ஓய்வுக்கு பிறகு, மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்துள்ளன.

ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

இரண்டாவது முறையாக வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது தல அஜித்துக்கு விபத்து ஏற்பட்டு காயம் அடைந்துள்ள தகவலை அறிந்த அஜித் ரசிகர்கள் ரொம்பவே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். வலிமை படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு தொடர்ந்து, அஜித்துக்கு காயம் ஏற்படும் தகவல்களே கிடைத்து வருவது கவலையில் ஆழ்த்தி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X