Just In
- 45 min ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
- 58 min ago
டைம் டிராவல் கதை.. உருவாகிறது 'இன்று நேற்று நாளை 2' ஆம் பாகம்.. பூஜையுடன் ஷூட்டிங் தொடக்கம்!
- 1 hr ago
பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை இருந்த பாலாஜிக்கு இவ்வளவுதான் சம்பளமா? தீயாய் பரவும் பட்டியல்!
- 3 hrs ago
அக்ரிமென்டை வைத்து மிரட்டியதா விஜய் டிவி? சுரேஷ் சக்கரவர்த்தியின் டிவீட்டால் ரசிகர்கள் ஷாக்!
Don't Miss!
- Sports
ரோகித், கில் சிறப்பான துவக்கத்தை தரணும்... பந்த் தொடர்ந்து ஆடணும்... பாண்டிங் அறிவுரை
- News
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்... 2 தொகுதியில் போட்டி... மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்களுக்கு வயசுக்கு மீறின புத்திசாலித்தனம் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance
முகேஷ் அம்பானியின் அதிரடி திட்டம்.. சவால் விடும் வாட்ஸப் + ஜியோமார்ட் கூட்டணி..!
- Automobiles
தானாகவே ஓடும்... இந்தியாவிற்கு வரவுள்ள டெஸ்லா கார் பற்றிய இந்த விஷயங்களை உங்ககிட்ட யாரும் சொல்ல மாட்டாங்க...
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
செம க்யூட் தல.. ரசிகருடன் ரீசன்ட் க்ளிக்.. ரகசியமா நடக்குதா வலிமை பட ஷூட்டிங்?
சென்னை: நடிகர் அஜித், கேரவன் அருகில் ரசிகருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
போனி கபூர் தயாரிப்பில், எச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த படத்தைத் தொடர்ந்து, அதே கூட்டணியில் அஜித்தின் வலிமை படம் மாஸாக உருவாகி வருகிறது.

அஜித்துக்கு ஆக்ஸிடன்ட்
வலிமை படத்தின் ஹீரோயின், வில்லன் உள்ளிட்ட எந்தவொரு அப்டேட்டையும் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் வலிமை படக் குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அப்டேட் கேட்டு காத்திருந்த தல ரசிகர்களுக்கு, வலிமை பட ஷூட்டிங்கில் அஜித்துக்கு ஆக்ஸிடன்ட் ஆனது என்ற செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியது.

வலிமை லுக்
அதனைத் தொடர்ந்து, அஜித்துக்கு என்ன ஆச்சு? என ரசிகர்கள் பதறி வந்த நிலையில், லீலா பேலஸில் நடைபெற்ற சுரேஷ் சந்திராவின் இல்லத் திருமண விழாவில் நடிகர் அஜித் கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் டிரெண்டிங் ஆனது. மேலும், வலிமை படத்தின் லுக்கும் ரசிகர்களுக்கு ரிவீல் செய்யப்பட்டது.

தயாரிப்பாளருக்கு திட்டு
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித்தின் வலிமை படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்து வருகிறார். வலிமை படம் குறித்த அப்டேட்டை விடாமல், வக்கீல் சாப் படத்தின் அப்டேட்டை விட்ட போனி கபூரை அஜித் ரசிகர்கள் சகட்டு மேனிக்கு திட்டியும், ஆபாசமாக சித்தரித்து மீம்களையும் பதிவிட்டு வந்தனர்.

நண்பர் அஜித்
அதன்பிறகு, வலிமை படத்தின் பைக் ரேஸ் காட்சிகள் லீக்காகி வைரலான நிலையில், சமீபத்தில் நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய், நண்பர் அஜித் போல கோட் ஷூட் போட்டு வந்தேன் எனக் கூறி, தல - தளபதி ரசிகர்கள் சண்டைக்கு தற்காலிகமாக முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

வைரலாகும் புகைப்படம்
ப்ளூ கலர் ஷர்ட், ப்ளூ கலர் ஜீன்ஸ், ஒயிட் கலர் ஷூ மற்றும் ஸ்பெக்ஸ் அணிந்து செம ஹேண்ட்ஸம் ஆக தல அஜித் ரசிகர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட சமீபத்திய புகைப்படத்தை, இன்று தல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

ரகசியமாக
கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நடிகர் அஜித்தின் வலிமை பட ஷூட்டிங் ரகசியமாக நடக்கிறதா? என்ற கேள்வி கேரவன் பக்கத்தில் ரசிகருடன் தல அஜித் எடுத்த புகைப்படத்தின் மூலம் எழுந்துள்ளது. இல்லை இது ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படமாகவும் இருக்கலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.