அடிபட்டுடிச்சுன்னு சொன்னாங்க.. லீலா பேலஸில் அஜித்.. வைரலாகும் வீடியோ.. வலிமை இரண்டாவது லுக் இதுதானா?

Recommended Video

அடிபட்டுடிச்சுன்னு சொன்னாங்க.. லீலா பேலஸில் அஜித்.. வலிமை இரண்டாவது லுக் இதுதானா? - வீடியோ

சென்னை: வலிமை படப்பிடிப்பில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்ட விஷயம் காட்டுத்தீயாய் பரவியது.

தல ரசிகர்களும் #GetWellSoonThalaAjith என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி நேற்று முன் தினம் டிரெண்ட் செய்தனர்.

இந்நிலையில், தற்போது, லீலா பேலஸில் நடைபெற்று வரும் திருமண நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் அஜித் கலந்து கொண்டார் என்றும், அவரது லேட்டஸ்ட் வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.

வலிமை படப்பிடிப்பில்

வலிமை படப்பிடிப்பில்

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பின் போது, பைக்கில் இருந்து கீழே விழுந்து நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், சில வாரங்கள் ஓய்வில் இருக்கிறார் என்ற தகவல்களும் நேற்று முன் தினம் காட்டுத் தீ போல பரவியது.

வரவேற்கும் அஜித்

விபத்து காரணமாக ஓய்வில் அஜித் இருக்கிறார் என செய்திகள் பரவின. இந்நிலையில், உறவினர் திருமண விழாவில், நடிகர் அஜித் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில், திருமணத்திற்கு வருகை தரும் நபர்களுக்கு, மணி மாலை ஒன்றை கழுத்தில் அணிவித்து, நடிகர் அஜித் வரவேற்று வருகிறார்.

க்ளீன் ஷேவ்

வலிமை படத்தில் நடிகர் அஜித் இரு வேடங்களில் நடித்து வருகிறார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த ஆண்டு, நடிகர் அஜித் கெடா மீசையுடன், பருமான உடல் தோற்றத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில், தற்போது, க்ளீஷ் ஷேவ் செய்த படி செம ஸ்லிம்மாக உள்ளார்.

வலிமை லுக்

வலிமை படத்தின் இரண்டாவது லுக் இதுதான் என்றும், வில்லன் படத்தில் பார்த்தது போலவே நடிகர் அஜித் இருக்கிறார் என்றும், பில்லா 2 அஜித் பேக் என்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில், புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். நடிகை ஷாலினியும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

 புதுசா? பழசா?

புதுசா? பழசா?

அஜித்தின் புதிய வீடியொ மற்றும் புகைப்படங்கள் தான் இது என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர். ஆனால், ஒரு சிலர், இது புது வீடியோ மற்றும் புகைப்படங்கள் இல்லை என்றும், பழசு என்றும் தங்கள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். குடும்ப விழா என்பதால், மீடியாக்களின் பார்வை விழவில்லை என்றே தெரிகிறது.

விரைவில் படப்பிடிப்பு

வலிமை படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் நடைபெறும் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் நடிகர் அஜித், தனது குடும்ப விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தான் இவை என்றும் தல ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X