அப்பா கூட நடிச்சதுக்கு தேங்க்ஸ் அங்கிள்.. அருண் விஜய்யை நெகிழ வைத்த "தல" மகள்!
நடிகர் அருண் விஜய்க்கு அஜீத்தின் மகள் அனோஷ்கா கடிதம் எழுதி பாராட்டியுள்ளார். குட்டி தேவதை எழுதிய கடிதத்தில் நெகிழ்ந்து போயுள்ளாராம் அருண் விஜய்.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் 'என்னை அறிந்தால்'. இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் திரையுலக பிரமுகர்களிடம் இருந்தும் ரசிகர்களிடம் இருந்தும் பெரும் பாராட்டை பெற்றுள்ளார் அருண்விஜய்.
தற்போது ஒரு வி.ஐ.பியிடம் இருந்தும் பாராட்டு கடிதம் வந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அந்த வி.ஐ.பி வேறு யாருமில்லை. அஜீத்தின் ஏழு வயது மகள் அனோஷ்காதான்.

அனோஷ்கா கடிதம்
என்னை அறிந்தால்' படத்தின் பிரிவியூ ஷோ பார்த்து முடித்தவுடன் அருண்விஜய்யை சந்தித்த அனோஷ்கா, ஒரு கடிதத்தை கொடுத்ததாகவும், அந்த கடிதத்தில் 'முதல்முறையாக வில்லன் வேடத்தில் நடித்த உங்களுக்கு பாராட்டுக்கள்.

நன்றி அங்கிள்
இந்த படத்தில் நீங்கள் நடித்த காட்சிகளை நான் மிகவும் ரசித்தேன். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் உங்கள் நடிப்பு அற்புதம். என் தந்தையுடன் நடித்ததற்கு நன்றி' என்று எழுதியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

பதில் கடிதம்
அஜித்தின் குட்டிதேவதை அனோஷ்காவின் கடிதத்திற்கு நன்றி கூறி அருண்விஜய் பதில் கடிதம் எழுதியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

வா டீல்
'என்னை அறிந்தால்' பட வெற்றியை அடுத்து அருண்விஜய் நடித்த வா டீல்' படத்தை விரைவில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் மும்முரமாக பணிகளை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.

கார்த்திகா நாயர்
'வா டீல்' படத்தில் அருண்விஜய், வம்சி கிருஷ்ணா, கார்த்திகா நாயர், சதீஷ், ஜெயப்பிரகாஷ், ரேணுகா மற்றும் பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தை சிவஞானம் இயக்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











