தமிழ் சினிமாவின் தல.. உங்களின் சினிமா பயணம் உத்வேகம்.. அஜித்தை வாழ்த்தும் வலிமை வில்லன்!
சென்னை: நடிகர் அஜித் சினிமாவுக்கு வந்து 28 வருடம் ஆனதை ஒட்டி, வலிமை பட வில்லன் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் அஜித், இப்போது 'வலிமை' படத்தில் நடித்து வருகிறார். ஹெச்.வினோத் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.
போனி கபூர் தயாரிக்கிறார். இந்தி நடிகை ஹூமா குரேஸி, அஜித் ஜோடியாக நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார்.

லாக்டவுன்
இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. வெளிநாட்டில் சில காட்சிகளை படமாக்கத் திட்டமிட்டிருந்தனர். வேகமாக நடைபெற்று வந்த இந்தப் படத்தின் ஷூட்டிங், லாக்டவுன் காரணமாக தடைபட்டுள்ளது. வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சியையும் படக்குழு கேன்சல் செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

காமன் டிபி
இந்நிலையில், நடிகர் அஜித் சினிமாவுக்கு வந்து 28 வருடங்கள் ஆகிறது. அவர் அமராவதி படம் மூலம் ஹீரோ ஆனார். இந்தப் படத்தில் ஒப்பந்தமாகி, நேற்றோடு 28 வருடங்கள் ஆனது. இதை முன்னிட்டு அவர் ரசிகர்கள் #28YrsOfAjithismCDPBlast என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர். ஒரு வாரத்துக்கு முன்பே இந்த ஹேஷ்டேக் டிரெண்டானது.

பாம்புகள் மத்தியில்
இதற்கான காமன் டிபியை, பல பிரபலங்கள் ட்விட்டரில் வெளியிட்டனர். இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை பூனம் பஜ்வா, நடிகர் பிரசன்னா, பிரேம்ஜி, இசையமைப்பாளர் சாம் சி.எஸ் என அந்தப் பிரபலங்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. அந்த காமன் டிபியில் பாம்புகள் மத்தியில் கம்பீரமாக நடிகர் அஜித் நிற்கிறார். தன்னம்பிக்கை சிகரம் என்று அதற்கு கேப்ஷன் கொடுத்திருந்தனர். இந்த டிபி வைரலானது.

சினிமா பிரபலங்கள்
இதையடுத்து நடிகர் அஜித்தை சினிமா பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர். அதற்காக உருவாக்கப்பட்ட #28YrsOfSELFMADETHALAAjith என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. நடிகர் பிரசன்னா, கடந்த சில நாட்களுக்கு முன், 'நடிகனாக வேண்டும் என்ற என் கனவை வலுப்படுத்திய பெயர்; என்னை நானே உருவாக்கிக் கொள்ள கற்றுத்தந்த பெயர்; தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் அதைக் கடக்க தூண்டிய பெயர்; கடினமான காலங்களில் என்னைத் தாங்கிய பெயர்' என்று அஜித்தைப் பாராட்டி இருந்தார்.

வலிமை வில்லன்
இந்நிலையில், அஜித்தின் 'வலிமை' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடிக்கும் கார்த்திகேயாவும் நடிகர் அஜித்தை வாழ்த்தியுள்ளார். இவர், தெலுங்கில் ஆர்எக்ஸ்100 மற்றும் 90 எம்.எல். படங்களில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். இவர் ட்விட்டரில் நடிகர் அஜித்குமாரின் போட்டோவை வெளியிட்டு, #28YrsOfSELFMADETHALAAjith என்ற ஹேஷ்டேக்கில் கூறியிருப்பதாவது:

தமிழ் சினிமாவின் 'தல'
சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தவர் அஜித். பல கஷ்டங்களையும் தோல்விகளையும் எதிர்கொண்டு ஒவ்வொரு முறையும் வலுவாக வெளிப்பட்டு தமிழ் சினிமாவின் 'தல' ஆகி இருக்கிறார். உங்கள் சினிமா பயணத்தின் ஒவ்வொரு பக்கத்தையும் உத்வேகமாக எடுத்துக்கொள்ளலாம். சினிமாவில் 28 வருடத்தை நிறைவு செய்ததற்கு என் இனிய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











