மீண்டும் வைரலாகும் அஜித் லேட்டஸ்ட் போட்டோஸ்...இந்த முறை துப்பாக்கி சுடுதல்
சென்னை : வெறும் நடிப்பால் மட்டுமல்ல தனது தனிப்பட்ட திறமைகளாலும் ரசிகர்கள் பலரின் மனதில் இடம்பிடித்தவர் தல அஜித். தனது பிஸியான வேலைகளுக்கு நடுவிலும் பயிற்சியை தொடர அஜித் தவறுவதில்லை.

கொரோனாவிற்கு பிறகு வலிமை படத்தின் சூட்டிங்கில் பிஸியாக இருந்த அஜித், தற்போது மீண்டும் பயிற்சியை தொடர்ந்துள்ளார். பைக் ரேஸ், போட்டோகிராஃபி, சமையல், ஏரோ மாடலிங் என பல துறையும் தனது திறமையை நிரூபித்துள்ள அஜித், தற்போது துப்பாக்கிச் சுடுதலிலும் தனது திறமையை காட்டி வருகிறார்.
தற்போது தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக அடுத்த லெவல் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அஜித். சென்னை துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித் பயிற்சி எடுக்கும் போட்டோக்களை ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த போட்டோக்கள் இப்போது வைரலாகி வருகிறது. புதிய லுக்கில் அஜித், அட்டகாசமாக பயிற்சி எடுத்து வரும் போட்டோக்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மொட்டை தலையுடன் அஜித் இருக்க போட்டோக்களை ஏற்கனவே அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வரும் நிலையில், துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியிலும் கலக்கி வருவதையும் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











