ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் வெளியிட்ட அஜித்தின் மாஸ் போஸ்.. வைரலாகும் வீடியோ.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: ஷாருக் கான் வெளியிட்டுள்ள அஜித்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகர் அஜித் இப்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார்.
'நேர்கொண்ட பார்வை' படத்தை அடுத்து இதையும் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார்.

ஹூமா குரேஸி
ஶ்ரீதேவியின் கணவரும் பிரபல இந்திப் பட தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். அஜித் ஜோடியாக இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் 'காலா' படத்தில் நடித்திருந்தார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார்.

கொரோனாவால் தடை
மற்றொரு வில்லனாக, 100 படத்தில் நடித்த ராஜ் ஐயப்பா நடித்து வருகிறார். கொரோனா காரணமாக இதன் ஷூட்டிங் தடைபட்டுள்ளது. வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய காட்சியையும் படக்குழு கேன்சல் செய்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் பற்றிய தகவல்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வந்துகொண்டே இருக்கின்றன.

நடிகர் ஷாருக்கான்
அவர் சும்மா ஏதாவது செய்தாலும் அதை அவரது ரசிகர்கள் வைரலாக்கி விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் அவர், அந்தரத்தில் கோளாறான ஆளில்லாத விமானத்தை லாவகமாக தரையிறக்கிய வீடியோ வைரலானது. பின்னர் சமீபத்தில் குடும்பத்துடன் காரில் ஏறும் வீடியோ வைரலானது. இந்நிலையில் இப்போது பிரபல இந்தி நடிகர் ஷாருக்கானின் ரெட்சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

ஷாருக்கானின் அண்ணன்
அதில், அஜித் நடித்த ஒரே ஒரு இந்தி படம், 'அசோகா'தான் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோவில், அஜித் நடித்த அசோகா படத்தின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 2001 ஆம் ஆண்டு பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கான் நடிப்பில் உருவான இந்தி படம், அசோகா. இதில் ஷாருக்கானின் அண்ணனாக நடித்திருந்தார் அஜித்.

ரெட் சில்லீஸ்
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து இயக்கிய இந்தப் படத்தில், கரீனா கபூர், ஹர்ஷிதா பட், டேனி டென்ஸோங்கப்பா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நடிகை ஜூஹி சாவ்லாவுடன் இணைந்து நடிகர் ஷாருக்கான் தயாரித்திருந்தார். இந்த படத்துக்கு அப்போது சில விருதுகளும் கிடைத்தன. இப்போது ரெட் சில்லீஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ காட்சியை, அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











