தல போல வருமா...ரசிகர்களுக்காக சென்டிமென்ட்டாக அஜித் எடுத்த கலக்கல் முடிவு

சென்னை : தென்னிந்திய சினிமா நடிகர்களில் பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகராக இருக்கும் அஜித், வேலையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் இருக்கக் கூடியவர். நடிப்பு, குடும்பம் மட்டுமின்றி தனது மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்வது என அனைத்தையும் சமநிலையில்கொண்டு செல்லக் கூடியவர்.

இவரின் வலிமை படம் பலராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக மாறி உள்ளது. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி தியேட்டர் உரிமையாளர்களும், மாஸ்டர் படத்தை போல் வலிமை படத்திற்கும் அதிக கூட்டம் வந்தால் தங்களின் தொழில் மீண்டும் புத்துயிர் பெறும் என்பதால் வலிமை பட அப்டேட்களை அதிகம் எதிர்பார்க்கிறார்கள்.

 அஜித் எடுத்த முடிவு

அஜித் எடுத்த முடிவு

ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு வருவதால் அவர்களையும், படத்தின் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களை மனதில் வைத்து திடமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இது பற்றி வலிமை படக்குழுவிற்கும் அஜித் ஸ்பேஷல் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

வியாழக்கிழமை சென்டிமென்ட்

வியாழக்கிழமை சென்டிமென்ட்

சில ஆண்டுகளுக்கு முன் அஜித் நடித்த படங்களுக்கு விவேகம், விஸ்வாசம், வீரம் என வி என்ற எழுத்தில் துவங்கும் பெயர்களே வைக்கப்பட்டன. சென்டிமென்ட் காரணமாக பெயர் தான் இப்படி வைக்கப்பட்டது என்றால், இந்த படங்கள் அனைத்தும் வியாழக்கிழமைகளிலேயே ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த சென்டிமென்ட் இப்போது வரை தொடர்ந்து வருகிறது.

 அஜித் வைத்த வேண்டுகோள்

அஜித் வைத்த வேண்டுகோள்

இதனால் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் தனது ரசிர்களுக்காக, மே 1 ம் தேதி தனது பிறந்த நாளுக்கு முன் வரும் வியாழக்கிழமையில் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டரை தயார் செய்து வெளியிடுமாறு வலிமை குழுவிற்கு அஜித் வேண்டுகோள் வைத்துள்ளார். தொடர்ந்து ஆடியோ வெளியீடு, டீசர், டிரைலர் என அடுத்தடுத்து வெளியிடுமாறும் அஜித் கேட்டுள்ளார்.

ஆகஸ்டில் வருகிறதா வலிமை

ஆகஸ்டில் வருகிறதா வலிமை

வலிமை படத்தை ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நீண்ட கால காத்திருப்பிற்கும், அதிக எதிர்பார்ப்பிற்கும் பிறகு வலிமை ரிலீஸ் செய்யப்பட உள்ளதால் அதனை திருவிழாவாக கொண்டாட அஜித் ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர். வலிமை படத்தை தியேட்டரிலேயே ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 எப்போது ஓடிடி ரிலீஸ்

எப்போது ஓடிடி ரிலீஸ்

விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 16 நாட்களிலேயே அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. ஆனால் வலிமை படத்தை அப்படி செய்யக் கூடாது. ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்கு பிறகே ஓடிடி.,யில் வெளியிட வேண்டும் என படக்குழுவினரிடம் அஜித் கேட்டுக் கொண்டுள்ளார். விஜய்யின் மாஸ்டர் படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்ட 16 நாட்களிலேயே அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. ஆனால் வலிமை படத்தை அப்படி செய்யக் கூடாது. ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்கு பிறகே ஓடிடி.,யில் வெளியிட வேண்டும் என படக்குழுவினரிடம் அஜித் கேட்டுக் கொண்டுள்ளார்.

அஜித்தை கொண்டாடும் திரையுலகம்

அஜித்தை கொண்டாடும் திரையுலகம்

தியேட்டர் உரிமையாளர்கள் அதிக வசூலை பெற வேண்டும் என்பதற்காக அஜித் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் இந்த வலுமான முடிவு காரணமாக ஒட்டுமொத்த திரையுலகமே அவரை கொண்டாடி வருகிறது. ஏராளமானோர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X