அப்டிபோடு...அப்டேட்டே இல்லாமல் சாதனை மேல் சாதனை... அதிர வைக்கும் வலிமை
சென்னை : அப்டேட் ஏதும் வெளியாகாத நிலையிலும் சோஷியல் மீடியாவில் அதிக டிரெண்டிங் ஆன டாப்பிக் என்றால் அது அஜித் நடிக்கும் வலிமை படம் தான். விரைவில் வலிமை படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியிடப்படும் என டைரக்டர் ஹச். வினோத் கூறிய பிறகும் அப்டேட் கேட்பதை அஜித் ரசிகர்கள் நிறுத்திய பாடில்லை.
அரசியல் தலைவர், கிரிக்கெட் மைதானம், பிரபலங்கள் ஆகியோரிடம் வலிமை அப்டேட் கேட்டு வந்த அஜித் ரசிகர்கள், தற்போது கோயிலில் சாமி ஆடும் பூசாரியிடமும் வலிமை அப்டேட் கேட்கும் நிலைக்கு வந்து விட்டனர்.

டிக்கெட் புக்கிங்கில் சாதனை
ஃபஸ்ட்லுக் வெளியிடும் தேதி கூட உறுதியாகாத நிலையில் வலிமை படத்தின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. வலிமை படத்தை பார்க்க ஆன்லைனில் இதுவரை 10 லட்சம் பேர் டிக்கெட் புக் செய்துள்ளனர். இதுவரை எந்த இந்திய சினிமாவும் இப்படி ஒரு சாதனையை படைத்ததில்லையாம்.

வியாபாரத்திலும் சாதனை
இந்நிலையில் அடுத்த சாதனையாக வலிமை படத்தின் வியாபாரமும் அமோகமாக நடந்து வருகிறது. உலக அளவில் வலிமை படத்தின் தியேட்டர், சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை இதுவரை ரூ.210 முதல் 215 கோடிக்கு வியாபாரம் ஆகி உள்ளதாம்.

வசூல் சாதனையும் உறுதி
இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆனதில்லையாம். அதுவும் ஃபஸ்ட்லுக் கூட வெளியிடப்படாத நிலையில், வலிமை படைத்துள்ள சாதனை சினிமா உலகை அதிர வைத்துள்ளது. இதனால் வலிமை படம் பாக்ஆபிஸ் வசூலிலும் சாதனை படைக்கும் என்பது உறுதியாகி விட்டது.

தீபாவளி ரிலீசா
போனி கபூர் தயாரிப்பில், ஹச்.வினோத் இயக்கி உள்ள வலிமை படத்தில் அஜித், ஹுமா குரேஷி, யோகிபாபு நடித்துள்ளனர். தெலுங்கு ஹீரோ கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படத்தை பிரம்மாண்டமாக தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











