அஜித் ரசிகர்களே தயாராகுங்க...வலிமை ஃபர்ஸ்ட்லுக், டீசர் வெளியாகும் தேதிகள் தெரிஞ்சாச்சு

சென்னை : வலிமை அப்டேட் எங்கே என்பது தான் சமீப காலமாக அஜித் ரசிகர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் இருக்கும் கேள்வியாக உள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வலிமை பற்றி, ஏதாவது ஒரு பிரபலம் ஏதாவது ஒரு விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று யுவன்சங்கர் ராஜா கூட, இப்படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாட்டை எழுதி உள்ளார். இந்த மாதத்திற்குள் படத்தின் டீசர் வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருவதாக கூறி இருந்தார். ஆனால் வெளிநாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 10 நாட்கள் படப்பிடிப்பிற்காக இதுவரை படக்குழு வெளிநாடு புறப்படவில்லை.

இன்று வெளியாகிறதா ஃபஸ்ட்லுக்

இன்று வெளியாகிறதா ஃபஸ்ட்லுக்

தற்போதைய தகவலின்படி, அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட் படி மார்ச் மாதத்தின் முதல் வியாழக்கிழமையான இன்று (மார்ச் 4) படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. அதுவும் ஒன்றல்ல, 10 புதிய போஸ்டர்களை படக்குழு தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. வெவ்வேறு மாஸ் கெட்அப்களில் அஜித் காட்சியளிக்கும் போஸ்டர் ரெடியாக உள்ளதாக கூறுகிறார்கள்.

ஆகஸ்ட்டில் ரிலீஸ்

ஆகஸ்ட்டில் ரிலீஸ்

ஆகஸ்ட்டில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதால் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை முன்கூட்டியே வெளியிட படக்குழுவிடம் அஜித் கூறி உள்ளார். இதனால் இன்று வெளியிடப்படாவிட்டால் மார்ச் மாதத்தின் கடைசி வியாழக்கிழமையான மார்ச் 25 அன்று வலிமை ஃபர்ஸ்ட்லுக் வெளியிடப்படலாம்.

எப்போது டீசர் ரிலீஸ்

எப்போது டீசர் ரிலீஸ்

அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்படி மார்ச் 4 அல்லது மார்ச் 25 ல் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட உள்ளது. படத்தின் டீசரை ஏப்ரல் 29 ல் ரிலீஸ் செய்ய அஜித் ஓகே சொல்லி விட்டதாக கூறப்படுகிறது. இதுவும் வியாழக்கிழமை தான் வருகிறது.

Recommended Video

Valimai Motion Poster update | Thala Ajith Riffle Club, Yuvan shankar Raja
ரசிகர்களுக்கு 2 நாள் கொண்டாட்டம்

ரசிகர்களுக்கு 2 நாள் கொண்டாட்டம்

இதனால் இந்த நாட்களையும் பிரம்மாண்டமாக கொண்டாட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். வரும் மே 1 ம் தேதி அஜித் தனது 50 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்கு முன்பே அவரது ரசிகர்களுக்கு 2 கொண்டாட்டம் காத்திருக்கிறது உறுதியாகி உள்ளது.

தெறிக்க விட காத்திருக்கும் ரசிகர்கள்

தெறிக்க விட காத்திருக்கும் ரசிகர்கள்

வலிமை டீசர், ஃபர்ஸ்ட்லுக் உள்ளிட்ட அடுத்தடுத்த கொண்டாட்டங்கள் காத்திருப்பதால் தல அஜித், வலிமை டீசர் போன்ற ஹாஷ்டாக்களை உருவாக்கி உலக அளவில் டிரெண்டிங்கில் அவற்றை நம்பர் ஒன் ஆக்க அஜித் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X