ஹைதராபாத் ஷெட்யூல் ஓவர்.. அஜித்தின் ‘வலிமை’ ஷூட்டிங் அடுத்த ஷெட்யூல் எங்கே தெரியுமா?
சென்னை: போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் 'தல' அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் ஹைதராபாத் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், தற்போது நடிகர் அஜித் மற்றும் வலிமை படக்குழு சென்னைக்கு திரும்பியுள்ளதாகவும், நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் விடுமுறையை கொண்டாட உள்ளார் என்றும்,
ஜனவரி முதல் வாரத்திற்கு மேல் தான் அடுத்த ஷூட்டிங் நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வலிமை
போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான நேர்கொண்ட பார்வை படம் விமர்சன ரீதியாகவும், கமர்ஷியலாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. வரும் 2020ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ள வலிமை படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

முதல் ஷெட்யூல்
என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு நடிகர் அஜித் மீண்டும் போலீஸ் அதிகாரியாக இந்த படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி வரும் வலிமை படத்தின் முதல் ஷெட்யூல் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ஹைதராபாத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது முதல் ஷெட்யூல் முடிவடைந்துள்ளது.

யார் ஹீரோயின்?
தளபதி 64 குறித்த கேஸ்டிங் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றது. ஆனால், வலிமை படத்தின் நாயகி யார் என்ற தகவல் கூட இன்னும் வெளியே கசியவில்லை. பாலிவுட் நடிகைகள் யமி கெளதம் அல்லது ஊர்வசி ரவுத்தலா நாயகிகளாக இணைவார்கள் என தொடர்ந்து வதந்திகள் வெளியாகி வருகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து எங்கே?
ஹைதராபாத் ஷூட்டிங் ஓவர் ஆகியுள்ள நிலையில், வலிமை படத்தின் இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் நடைபெறுகிறது. இதற்காக, ஸ்ரீ கோகுலம் ஸ்டூடியோவில் மிகப் பெரிய செட் ஒன்று போடப்பட்டு வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் இருந்து சென்னையில் ஷூட்டிங் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் மகளின் கிறிஸ்துமஸ் பாடல்
தல அஜித்தின் மகள் அனோஷ்கா, தனது பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பாடிய கிறிஸ்துமஸ் பாடல் வீடியோ சமூக வலைதளங்களில் தல ரசிகர்களால் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் நியூஇயர் விடுமுறையை நடிகர் அஜித் கொண்டாடி வருகிறார்.


Click it and Unblock the Notifications











