அட பாவமே...வலிமை தாமதத்திற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா ?
சென்னை : நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் முதலிடத்தில் இருப்பது அஜித் நடிக்கும் வலிமை படம் தான். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இதுவரை படத்தின் ஃபஸ்ட்லுக் போஸ்டர் கூட வெளியிடப்படவில்லை. சமீப நாட்களாக அவ்வப்போது ஏதாவது அப்டேட் மட்டும் வெளியிட்டு வந்தனர். கொரோனா லாக்டவுனால் அதுவும் நின்று போனது. ஆனாலும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர்.

லாக்டவுன் முடிந்ததும் படப்பிடிப்பு
வலிமை படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டதாகவும், ஸ்பெயினில் எடுக்கப்பட வேண்டிய க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் மட்டும் மீதம் இருப்பதாகவும் கூறப்பட்டது. லாக்டவுன் முடிந்ததும், அரசிடம் அனுமதி பெற்று இந்த காட்சிகளை எடுத்து முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

தாமதத்திற்கு இது தான் காரணமா
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த டைரக்டர் ஹச்.வினோத் கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக 60 வயதிற்கு மேற்பட்ட பல நடிகர், நடிகைகள் படத்திலிருந்து விலகி விட்டனர். இதனால் வேறு ஆட்களை வைத்து அந்த காட்சிகளை மீண்டும் எடுக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளோம். படத்தின் தாமதத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றார்.

வலிமையை மிரட்டும் கொரோனா
கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக சில இடங்களில் படப்பிடிப்பை தொடர அனுமதி கிடைக்கவில்லை. இதனால் பல காட்சிகளை மீண்டும் வேறு இடங்களில் வைத்து படமாக்கி வருகிறோம். விரைவில் மீதமுள்ள காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட உள்ளதாக அவர் கூறினார்.

யாரெல்லாம் இருக்காங்க
போனி கபூர் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித், ஹுமா குரேஷி, யோகிபாபு, கார்த்திகேயா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பலர் விலகி விட்டதால் மற்ற நடிகர்கள் பற்றிய உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

போனி கபூர் தான் பாவம்
ஏற்கனவே லாக்டவுன், மும்பையில் புயல் மழையால் இந்தி படங்களுக்கு அமைக்கப்பட்ட பிரம்மாண்ட செட் சேதமடைந்ததால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார் போனி கபூர். இந்நிலையில் வலிமை படத்தின் பல காட்சிகளை மீண்டும், மீண்டும் படமாக்கி வருவதால் கூடுதல் நிதி சுமையை சந்திக்க வேண்டிய நிலையில் போனி கபூர் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











