அஜித் ட்ரிபிள் ஆக்‌ஷனில் நடித்த வரலாறு… சுவாரசியத் தகவல் !

சென்னை : 2006 ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ட்ரிபிள் ஆக்‌ஷனில் அஜித்தின் மாறுப்பட்ட நடிப்பில், கலக்கிய திரைப்படம் தான் வரலாறு.

இத்திரைப்படத்தில், அஜித், அசின், கனிகா, ரமேஷ்கன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தன. இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தில் நடிகர் அஜித், பரத நாட்டிய கலைஞராக, பெண் நளினத்துடன் நடித்திருப்பார். இத்திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை நிறைவு செய்வதை யொட்டி இப்படம் உள்ள சுவாரசியங்களை பார்க்கலாம்.

காட்ஃபாதர்

காட்ஃபாதர்

ஆரம்பத்தில் இத்திரைப்படத்திற்கு காட்ஃபாதர் என தலைப்பு வைக்கப்பட்டது. ஆனால் தமிழ் தலைப்புகள் கொண்ட படங்களுக்கு பொழுதுபோக்கு வரி விலக்கு அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த பிறகு தலைப்பு வரலாறு என மாற்றப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்கு வந்த இந்தப் படம், வக்ஷலை வாரி குவித்து பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

பாடல்கள் ஹிட்

பாடல்கள் ஹிட்

முத்து, படையப்பா மற்றும் தெனாலி போன்ற படங்களுக்குப் பிறகு கே.எஸ்.ரவிக்குமாரும் ஏ.ஆர்.ரஹ்மானும் நான்காவது முறையாக இந்த படத்தில் இணைந்தனர். இளமை, இன்னிசை, கம்மா கரையிலே, காற்றில் ஓர் வார்த்தை, தீயில் விழுந்தா ஆகிய ஒன்பது பாடல்கள் இதில் இடம் பெற்றிருந்தன. அனைத்து பாடல்களும் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தன.

பரபரப்பாக பேசப்பட்டது

பரபரப்பாக பேசப்பட்டது

கேஎஸ் ரவிக்குமார் இந்த கதையை பல நடிகர்களுக்கு இந்த கூறியுள்ளார் ஆனால், பலர் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டினார். அப்படத்தில் நடிக்க அஜித் ஒப்புக்கொண்டார். அஜித் இதில், பெண் போன்று நளினத்துடன் அழகாக நடித்திருப்பார். அவரின் இந்த கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.

நல்ல பெயரை கொடுக்கும்

நல்ல பெயரை கொடுக்கும்

ஆனால் அஜித், முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயங்கினார் என்றும் அதன் பிறகு ரவிக்குமார் இந்த படம் உங்களுக்கு நல்ல பெயரை கொடுக்கும் என கேஎஸ் ரவிக்குமார் நம்பிக்கை அளித்ததாகவும் தகவல்கள் அப்போது வெளிவந்தன.

சிறப்பானது

சிறப்பானது

வரலாறு திரைப்படத்தல் கனிகாவின் கதாபாத்திரத்தில் நடிக்க, மீனா, தேவயானி மற்றும் சிம்ரன் ஆகியோருடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இறுதியில் கனிகா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். இன்று வரை அவருக்கு இந்த கதாபாத்திரம் ஒரு சிறப்பானதாகவே உள்ளது.

படப்பிடிப்பு தாமதமானது

படப்பிடிப்பு தாமதமானது

கஜினி, மஜா மற்றும் சிவகாசி போன்ற படங்களில் அசின் பிஸியாக நடித்து வந்ததால், அசினால் தேதிகளை ஒதுக்க முடியவில்லை. இதனால், வரலாறு திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்தது. இந்த இடைபட்ட காலத்தில் அஜித் பரமசிவன் மற்றும் திருப்பதி போன்ற படங்களில் நடித்து முடித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X