தல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா?

சென்னை: விஸ்வாசம் திரைப்படத்தில் அஜித்தோடு மற்றுமொரு நடிகரும் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் நான்காவது படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

Thala Ajiths Viswasam update!

சிவாவுக்கே உரித்தான பக்கா மாஸ் என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக தயாராகி வரும் இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். வயதான மாஸ் லுக், மற்றொன்று ஸ்டைலிஷ் யூத் லுக்.

அஜித்தைப் போலவே நடிகர் தம்பி ராமையாவும் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஒரு வயதான மற்றும் இளமையான தோற்றத்தில் தம்பி ராமையா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஸ்வாசம் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இந்தத் தகவல் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்திரைப்படத்தில் நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

தல அஜித்தை எங்களால் எத்தனை கெட்டப்பில் வேண்டுமானாலும் பார்க்க முடியும், படத்தில் வித்தியாசத்தைக் காட்ட வேண்டுமென நினைத்து தம்பி ராமையாவுக்கு அடுத்தபடியாக நயன்தாராவையும் வயதான தோற்றத்தில் காட்டிவிடாதீர்கள் என்பதே தல மற்றும் நயன் ரசிகர்களின் கோரிக்கை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X