மனைவி ஷாலினியுடன் தல அஜித் செய்த காரியம்...வைரலாகும் போட்டோ
சென்னை : தமிழ் சினிமாவில் அதிகம் கொண்டாடப்பட்ட காதல் ஜோடி என்றால் அது அஜித் - ஷாலினி தான். அவர்களின் காதல் மற்றும் திருமண வாழ்க்கை ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல பிரபலங்களுக்கும் முன்னுதாரணமாக உள்ளது.

அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஷாலினி, அதன் பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டார். மிக அரிதாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்து வந்தார். அஜித் நடித்த படங்களை பார்க்க தியேட்டருக்கோ அல்லது பாட்மின்டன் விளையாட்டை காணவோ ஷாலினி வருவது அரிதாக இருந்து வருகிறது.
அவர்களின் குடும்ப போட்டோவும் மிக அரிதாகவே வெளியாகி வரும். குழந்தைகளின் பள்ளி விழாக்களில் கூட அஜித் கலந்து கொள்வார். ஆனால் அந்த போட்டோக்களும் கூட வெளிவருவது கிடையாது.
இந்நிலையில், அஜித்தை கட்டிப்பிடித்தபடி ஷாலினி நிற்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. பளிச்சென்ற மஞ்சள் நிற உடையில் ஷாலினியும், கறுப்பு நிற உடையில் அஜித்தும் இருக்கும் இந்த போட்டோவை அஜித் மற்றம் ஷாலினியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
இந்த போட்டோ இப்போது வேகமாக பகிரப்பட்டு வருவதுடன் பலரும் இந்த தம்பதியை புகழ்ந்து கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். அஜித் நடிக்கும் வலிமை அப்டேட் பற்றி அவரது ரசிகர்கள் பிரதமரிடமே கேட்டுள்ள நிலையில் வெளியாகி உள்ள இந்த போட்டோ அஜித் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











