ப்பா.. இன்னா ஹேண்ட்ஸமா இருக்காரு தல.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.. வலிமை திருவிழா ஆரம்பம்!
சென்னை: வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்ட தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அழகன் என்றாலே அஜித் தான் என சினிமா இண்டஸ்ட்ரிக்கே தெரியும். அந்தளவுக்கு செம ஹேண்ட்ஸமாக இருக்கும் தல அஜித்தின் புதிய புகைப்படம் தாறுமாறாக வைரலாகி வருகிறது.
வரும் ஜூலை 15ம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லுக் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்பவே வலிமை திருவிழாவை தல ரசிகர்கள் ஆரம்பித்து விட்டனர்.

அழகன்
ஆண் அழகா உன் அடிமை இங்கே என இப்போதும் ரசிகைகள் தல அஜித்தை பார்த்து பாடும் அளவுக்கு அப்படியொரு பேரழகுடன் இருக்கும் நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது. வலிமை ஃபர்ஸ்ட் லுக் வருவதற்கு முன் அஜித்தின் இந்த புகைப்படம் வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

காத்திருக்கும் ரசிகர்கள்
வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் நாளை எதிர்பார்த்து தல ரசிகர்கள் மட்டுமின்றி உலகம் முழுக்க உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வரும் ஜூலை 15ம் தேதி ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி சோஷியல் மீடியாவை தெறிக்கவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெறிக்கும் ஸ்டன்ட்டுகள்
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் மண்ணுக்குள் புதைந்திருந்து எழுந்து வந்து நடிகர் கார்த்தி சண்டையிடும் அளவுக்கு வித்தியாசமான ஸ்ட்ன்ட்டை இயக்குநர் எச். வினோத் இயக்கி இருந்தார். அதை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு வேற லெவல் பைக் ஸ்டன்ட் இந்த படத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

250 கோடி பிசினஸ்
நடிகர் அஜித்தின் படத்திற்கு ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் எல்லாம் வெளியிட்டு விளம்பரம் பண்ணவே தேவையில்லை. தல என்கிற ஒரு மந்திரச் சொல் போதும் ஐரோப்பா கால் பந்தாட்ட மைதானமே அதிரும் அளவுக்கு அஜித் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டே மிகப்பெரிய விளம்பரம் செய்ததன் விளைவாக ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியாகாத நிலையில், 250 கோடி அளவுக்கு படம் பிசினஸ் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினமும் தல தரிசனம்
மே மாதம் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என போனி கபூர் அறிவித்த நிலையில், அதற்கு முன்னதாக தொடர்ந்து நடிகர் அஜித் சைக்கிள் ஓட்டிய புகைப்படம், தல அஜித் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஏகப்பட்ட போட்டோக்கள் வெளியாகின. அதே போல தற்போதும் அஜித் ரசிகர்களுக்கு இனி தினமும் தல தரிசனம் கிடைக்கும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











