அஜித் கைகோர்க்க நினைத்த டைரக்டர்...நிறைவேறாமல் போன ஆசை
சென்னை : மலையாள திரையுலகின் முக்கிய டைரக்டர்களில் ஒருவர் கே.ஆர்.சச்சிதானந்தன். பல ஹிட் படங்களைக் கொடுத்த இவர், சிறந்த திரைக்கதை எழுத்தாளரும் கூட. இவர் கடந்த ஆண்டு ஜுன் 18 ம் தேதி உயிரிழந்தார்.
சச்சிதானந்தன் கடைசியாக இயக்கிய படம் ப்ருத்விராஜ், பிஜு மேனன் நடித்த அய்யப்பனும் கோஷியும் படம். 2020 ம் ஆண்டு ரிலீசான இந்த படம், 2020 ன் முக்கிய படங்களில் ஒன்றாக இருந்தது.

சச்சிதானந்தனை வாழ்த்திய அஜித்
பலரின் மனம் கவர்ந்த இந்த படத்தை பார்த்து விட்டு ஏராளமான பிரபலங்கள் மலையாள திரையுலகில் மட்டுமின்றி பிற மொழிகளை சேர்ந்தவர்களும் சச்சிதானந்தனை பாராட்டினர். அப்படி பாராட்டிய பிரபலங்களில் ஒருவர் நடிகர் அஜித்.
தனுஷ்கோடி வெளியிட்ட ரகசியம்
அய்யப்பனும் கோஷியும் படத்தை பார்த்து விட்டு சச்சிதானந்தனை போனில் தொடர்பு கொண்ட அஜித், அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு பற்றி சச்சிதானந்தனின் மனைவி தனுஷ்கோடி வீடியோ ஒன்றில் விளக்கமாக பேசி உள்ளார்.
Recommended Video

சச்சிதானந்தனை சந்திக்க நினைத்த அஜித்
தனுஷ்கோடி கூறுகையில், போனில் பேசிய அஜித், கொச்சிக்கு வந்து சச்சிதானந்தனை சந்திப்பதாக கூறினார். ஆனால் சச்சிதானந்தன், அதற்கு பதிலாக நான் சென்னை வந்து உங்களை சந்திக்கிறேன் என்றார். கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் வந்ததும் சென்னை வருவதாக கூறினார்.

அஜித்தின் நிறைவேறாத ஆசை
அப்போது, சச்சிதானந்தனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற விரும்புவதாக அஜித் தனது ஆசையை கூறி உள்ளார். அதற்கு ஒப்புக் கொண்ட சச்சிதானந்தனும், அது தனது மிகப்பெரிய கனவு படமாக இருக்கும் என கூறி உள்ளார். இந்த தகவலை சச்சிதானந்தனின் நினைவு நாளில் கேரள அஜித் ரசிகர்கள் சோகத்துடன் பகிர்ந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











