குடும்பத்துடன் வெளியே செல்லும் நடிகர் அஜித்.. வைரலாகும் தாறுமாறு வீடியோ.. தல ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: கருப்பு தொப்பி, மாஸ்க் அணிந்து கொண்டு நடிகை ஷாலினி மற்றும் குடும்பத்தினருடன் நடிகர் அஜித் வெளியே சென்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Recommended Video

தல ரகசியமா SOCIAL MEDIAல இருக்காரு | ACTRESS PRIYADARSHINI REVEAL THE SECRET | FILMIBEAT TAMIL

தல அஜித் சமூக வலைதளத்தில் இல்லையென்றாலும், அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் எப்போதுமே அஜித்தின் ஆட்சியை நடத்தி வருகின்றனர்.

தற்போது வெளியாகி உள்ள இந்த வைரல் வீடியோவை அஜித் ரசிகர்கள் காட்டுத் தீயைப் போல வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் வெயிட்டிங்

ரசிகர்கள் வெயிட்டிங்

தீபாவளிக்கு தல அஜித்தின் தரிசனம் கிடைக்கும் என ரசிகர்கள் நினைத்து இருந்த நிலையில், கொரோனா கலவரத்தால், அடுத்த சம்மருக்குத் தான் வலிமை படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் அந்த படத்தின் அப்டேட்டையாவது படக்குழு வெளியிட வேண்டும் என நீண்ட நாட்களாகவே ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

காலில் காயம்

காலில் காயம்

லாக்டவுனுக்கு முன்னதாக வலிமை பட ஷூட்டிங்கின் போது பைக்கில் இருந்து கீழே விழுந்து தல அஜித்துக்கு காலில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் பரவின. மேலும், #GetwellsoonAjith என்ற ஹாஷ்டேக் எல்லாம் டிரெண்டாகின. ஆனால், தல அஜித்துக்கு லேசான காயம் தான் அவர் நலமுடன் உள்ளார் என்ற தகவல் வெளியான பின்னர், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருமணத்தில் தென்பட்ட தல

திருமணத்தில் தென்பட்ட தல

அதன் பின்னர், மேனேஜர் சுரேஷ் சந்திராவின் இல்லத் திருமணத்தில் தல அஜித் கலந்து கொண்டு, திருமணத்திற்கு வரும் விருந்தினரை உபசரிக்கும் வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின. வலிமை படத்தில் நடிகர் அஜித் இந்த லுக்கில் தான் வரப் போகிறார் என்ற தகவல் கிடைத்த நிலையில், அதனை மிகப்பெரிய அப்டேட்டாக அஜித் ரசிகர்கள் கொண்டாடினர்.

குடும்பத்துடன் வெளியே

குடும்பத்துடன் வெளியே

இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் அவரது மனைவி நடிகை ஷாலினி மற்றும் குடும்பத்தினர், வெளியே சென்று விட்டு, காரில் ஏறும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த லாக்டவுன் காலத்தில் நடிகர் அஜித் எங்கே சென்றபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்ற விவரம் ஏதும் தெரியவில்லை.

மாஸ்க் அணிந்து

மாஸ்க் அணிந்து

காட்சிகளை பார்த்தால் ஏதோ ரெசார்ட் அல்லது ஹோட்டலுக்கு சென்றுவிட்டு திரும்புவது போலத் தெரிகிறது. மாஸ்க் அணிந்து கொண்டு, கருப்பு நிற தொப்பி அணிந்து கொண்டு செம கெத்தாக தல அஜித் பேசும் அந்த வீடியோ வெளியான நிலையில், மீண்டும் தல தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் அந்த வீடியோவையும், ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்களையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X