தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் தல தோனி ரெஃபரன்ஸ்.. வைரலாகும் புகைப்படம்!
சென்னை: ஜகமே தந்திரம் படத்தில் தல தோனியின் போட்டோ இடம்பெற்றுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள ஜகமே தந்திரம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
ஆக்ஷன் காட்சிகளில் தனுஷ் சுருளியாக அசத்தி உள்ளார் என்றும், கதையில் சிறிது தொய்வு உள்ளதாகவும் கருத்துக்களை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

அப்போ புரியல
ரகிட ரகிட பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை போட்டே ஜகமே தந்திரம் படத்தை பலரும் கலாய்த்து வருகின்றனர். கர்ணன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், ஜகமே தந்திரம் அந்தளவுக்கு விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை. "என்னை தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே.. அட அவனும் இங்கே நான் தானே" என்கிற வரிகளை போட்டு அப்போ புரியல.. இப்போ புரியல என கிண்டல் அடித்து வருகின்றனர்.

எப்பவுமே வில்லன் தான்
"நான் ஹீரோல்லாம் கிடையாது.. எப்பவுமே வில்லன் தான்" என தனுஷ் பேசும் மாஸ் வசனம் தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. பலரும் அந்த வசனத்தையும் புகைப்படத்தையும் போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.

ரொம்ப எக்ஸ்பெக்ட்
தனுஷ் ரசிகர்களுக்கே இந்த படம் சற்றே ஏமாற்றம் அளிக்கும் விதமாகவே அமைந்துள்ளது இவரது இந்த ட்வீட்டை பார்த்தாலே தெரிகிறது. துப்பாக்கிகள் ஏந்திய கேங் மத்தியில் ஒத்தையாளாக மாஸ் காட்டும் தனுஷின் ஸ்டில்லை ஷேர் செய்து இந்த ஃபிரேமை பார்த்து ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணிட்டேனோ என ரசிகர்கள் ஃபீல் பண்ணி வருகின்றனர்.

தோனி ரெஃபரன்ஸ்
ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் நின்று பேசும் ஒரு காட்சியில் அந்த இடத்தில் தல தோனியின் போஸ்டர் ஒன்று ஒட்டியிருக்கிறது. யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கடா என தோனி ரசிகர்கள் கெத்துக் காட்டி வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுக்க தனுஷின் ஜகமே தந்திரம் படம் குறித்த பேச்சு மட்டும் தான் உலவி வருகிறது.


Click it and Unblock the Notifications











